இந்த தஞ்சை பெருவுடையார் கோயில் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.1987 ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இந்த கோவில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோவில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றன.
இந்த கோவிலில் 23 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு, கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. அதனை முன்னிட்டு, 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நுழைவு வாயில், கேரளாந்தகன் கோபுரம், விமான கோபுரம், பெரியநாயகி அம்மன், முருகர், நடராஜர், விநாயகர் சன்னதி கோபுரங்களும் ரசாயன கலவை மூலம் வர்ணம் பூசப்பட்டது.
அதன்படி, இந்த பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் ரசயான கலவையுடன் வர்ணம் பூசும் பணி வருகிற ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைபெற இருப்பதாகவும். மழைநீரால் பாசி படியாமல் இருப்பதற்காகவும், பறவைகளின் எச்சத்தை அகற்றி அதன் பொலிவு மாறாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.