இந்த அணைக்கு அருகில் சிறுவர் பூங்கா, அடிப்படை வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குற்றால அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கே வந்து, தண்ணீரை கண்டு ரசித்து, விளையாடி செல்வதை விரும்புகின்றனர், தமிழக சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்லாமல் கேரளா மாநிலம் உட்பட பிற மாநில சுற்றுலாப் பயணிகளும் இங்கே விரும்பி வந்து மகிழ்கின்றனர்.