சித்திரை மாதம் வரும் பௌர்ணமியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குற்றால மெயின் அருவிக்கு மேலே அமைந்திருக்கும் செண்பகாதேவி கோவிலுக்கு வருகை தருவார்கள். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்றும் செண்பகா தேவி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகை தந்திருந்தார்கள். கொடுத்த பின்பு பொதுமக்கள் மலைக்கு மேலே செண்பகாதேவி அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பாறைகளையும் படிகளையும் கடந்து இரண்டு கிலோமீட்டர் மலை ஏறி வந்தால் செண்பகாதேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட அடர்ந்த காட்டின் நடுவே அமைந்திருக்கிறது. இந்த செண்பகாதேவி அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் திருமணம் ஆகும் போன்ற பல நம்பிக்கையுடன் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.