முகப்பு » புகைப்பட செய்தி » தென்காசி » சங்கரநாராயணர் கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே புறப்படும் சப்பரம்..

சங்கரநாராயணர் கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே புறப்படும் சப்பரம்..

Sankaranarayanan Temple | சங்கரன்கோவிலில் புருஷாமிருக ரிஷி வாகனம் மற்றும் காமதேனும் பசு வாகனம் வருடத்தில் சித்திரை திருவிழாவில் மட்டுமே எழுந்தருளும் என்பது குறிப்பிடத்தக்கது.

 • 16

  சங்கரநாராயணர் கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே புறப்படும் சப்பரம்..

  மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை பிரம்ம உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இங்கே, சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  MORE
  GALLERIES

 • 26

  சங்கரநாராயணர் கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே புறப்படும் சப்பரம்..

  இதனைத்தொடர்ந்து 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும், சுவாமி மற்றும் அம்பாளின் வீதி உலாவும் நடைபெறும். சித்திரை திருவிழா 9ம் திருநாளில் சுவாமி அம்பாள் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 36

  சங்கரநாராயணர் கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே புறப்படும் சப்பரம்..

  தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாவிடை சமேத சங்கரலிங்க சுவாமி பெரிய தேரிலும் கோமதி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 10.30 மணி அளவில் சுவாமி தேரோட்டம் தொடங்கியது.

  MORE
  GALLERIES

 • 46

  சங்கரநாராயணர் கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே புறப்படும் சப்பரம்..

  அதனைத் தொடர்ந்து 2வது தேரான கோமதி அம்பாள் தேரோட்டம் நிகழ்ச்சி 12 மணியளவில் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

  MORE
  GALLERIES

 • 56

  சங்கரநாராயணர் கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே புறப்படும் சப்பரம்..

  தேரோட்டத்திற்கு அடுத்த நாள், சித்திரை திருவிழா 39 வது நாள் - பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, சுவாமி - புருஷாமிருக ரிஷி வாகனத்திலும், அம்பாள் - காமதேனு பசு வாகனத்திலும் எழுந்தருளல் நடைபெறும்.

  MORE
  GALLERIES

 • 66

  சங்கரநாராயணர் கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே புறப்படும் சப்பரம்..

  சித்திரை திருவிழாவில் 48 நாள் திருநாளில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வாகனங்களில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளுவது வழக்கம். புருஷாமிருக ரிஷிவாகனம் மற்றும் காமதேனும் பசு வாகனம் வருடத்தில் சித்திரை திருவிழாவில் மட்டுமே எழுந்தருளும் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES