மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. பகல் நேரத்திலும் வானம் மேகமூட்டத்தால் இருண்டு காணப்படுகிறது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.