முகப்பு » புகைப்பட செய்தி » தென்காசி » குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

Courtallam Falls | தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளின் குளித்து மகிழ திட்டமிடுபவர்கள், அங்குள்ள அருவிகளின் தண்ணீர் வரத்து நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

 • 18

  குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

  மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் குற்றால சீசன் காலகட்டமாகும். எனினும் அவ்வப்போது பெய்தால் அருவிகளில் தண்ணீர் கொட்டும்.

  MORE
  GALLERIES

 • 28

  குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பலரும் தண்ணீர் இருக்கும் இடங்களையும், மலைப் பிரதேசங்களுக்கும் சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 38

  குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

  எனினும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. இதனால், தற்போது தண்ணீர் கொட்டும் அருவிகளுக்கு செல்வதற்கு பலரும் விரும்புகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 48

  குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

  அந்த வகையில், குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அங்கே, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் புலியருவி ஆகிய முக்கிய அருவிகளின் நீர் வரத்து நிலவரங்களை தெரிந்து கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 58

  குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

  மெயின் அருவி: குற்றாலம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இந்த மெயின் அருவிதான். தற்போது இங்கே தண்ணீர் வரத்து குறைந்து, மிகவும் குறைவான அளவிலேயே கொட்டுகிறது. எனினும், இதில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதைப் பார்க்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 68

  குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

  ஐந்தருவி : சீசன் காலங்களிலும், மழை நேரங்களிலும் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த ஐந்தருவி தற்போது தண்ணீர் இன்றி காட்சியளிக்கிறது. இங்கே இங்கே “வெறும் பாறை மட்டும்தான் பாட்டு”படிக்கின்றன. எனவே, இங்கே செல்வதை சுற்றுலா பயணிகள் தவிரிப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 78

  குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

  புலியருவி : சிறுவர்களும், பெண்களும் அதிகம் விரும்பும் அருவி என்று சொல்லப்படும் இந்த புலியருவிலும் தண்ணீர் வரத்து இல்லை. எனவே, தண்ணீர் வருகிறதா என்று தேடிச் சென்று ஏமாற வேண்டாம்.

  MORE
  GALLERIES

 • 88

  குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

  பழைய குற்றாலம் : அழகே வடிவாய் கொண்டதும், பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுமான இந்த பழைய குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்வதற்கு ஏற்றார்போல தண்ணீர் கொட்டுகிறது. நீரின் அளவு குறைவாக இருந்தாலும் குளித்து மகிழலாம். எனவே, இந்த அருவிக்கு செல்வது உங்களக்கு ஆறுதலாக இருக்கும்.

  MORE
  GALLERIES