மாவட்டத்தில் ஏராளமான திரைப்படங்கள் ஷுட்டிங் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சுமார் 50 ஆண்டுகளாக பிடப்பிடிப்பு தமாகவும், சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் ஃபேமஸ்ஸான காட்சிகள் சிலவும் இங்குதான் எடுக்கப்பட்டது. இந்த இடத்தை பற்றியும், இந்த இடத்தில் எடுக்கப்பட்ட மற்ற திரைப்படங்கள் குறித்தும் பார்ப்போம்.
முரளி நடிப்பில் வெளியான ‘தினந்தோறும்’ படத்தில் கதாநாயகனான முரளியுடன், கதாநாயகியான சுவலட்சுமி “பொண்ணுக்கு பர்த்டேனா நைட் 12 மணிக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல காதலன் பொக்கேவோடபோய் நிற்பான அது லவ்” என்று பேசும் காட்சியின் பின்புறத்தில் இந்த திருமலைக்கோவிலை பார்க்கலாம். இதேபோல கோவில் படிக்கட்டுகளிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும்.
விஜய்சேதுபதி - அஞ்சலி நடித்த சிந்துபாத் படத்தில், “நான் யாருக்கு சொன்னது உன்காதில் விழுந்தால் அதற்கு நானா பொறுப்பு, நீ என் கண்ணை பார்த்திருந்தால் புரிந்திருக்கும்“ என்று விஜய்சேதுபதியிடம் அஞ்சிலி கோவில் படிக்கட்டு மண்டபத்திற்கு அருகில் நின்றுகொண்டு கோபமாக பேசும் காட்சி இந்த திருமலைக் கோவில் படிக்கட்டுகளில்தான் படமாக்கப்பட்டது.
மேலும், முத்துராமலிங்கம் - கே.ஆர்.விஜயா நடிப்பில், 1969ல் வெளியான ‘கண்ணே பாப்பா படதில் வரும் சில பாடல் காட்சிகள், விஜயகாந்தி நடித்த வேலுண்டு விணையில்லை படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் ‘திருமலை குமாரசாமி’ என்ற பாடல் இந்த கோவிலில் உள்ள முருகனே போற்றி எழுதப்பட்டது.