யூடியூப்பில் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் போது வீடியோவின் மேல்பகுதியிலோ அல்லது கீழ்பகுதியிலோ செவ்வக வடிவில் குறிப்பிட்ட விளம்பரம் தோன்றும். இது பார்வையாளர்களுக்கு அசவுகரியத்தை கொடுப்பதாக பலரும் புகார் தெரிவித்தனர், இதனை ஒப்புக்கொண்டுள்ள யூடியூப் ஏப்ரல் 6 மாதல் அந்த விளம்பரம் வராது என குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே செல்போனில் இந்த விளம்பரத்தை யூடியூப் நீக்கியுள்ள நிலையில் தற்போது கம்யூட்டர் வெர்ஷனிலும் நீக்கியுள்ளது. வருமானத்தை தரும் விளம்பரத்தை நீக்குகிறார்களா என ஒரு பக்கம் ஷாக் இருந்தாலும், அந்த விளம்பரத்தை விரைவில் வேறு வடிவில் கொண்டு வந்து யூடியூப் நிச்சயம் காசு பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது