நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க நம்மில் பலர், ஏசி வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், அனைவராலும் ஏசி வாங்க முடியாது. அப்படி குறைவான விலையில் குளிரூட்டி வாங்க விரும்பினால், இந்த தொகுப்பு உங்களுக்கானது. ஆமாம், ரூ. 5000-க்கும் குறைவான ஏர் கூலர் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். சரியான ஏர் கூலரை தேர்வு செய்வதும் சாதாரண விஷயம் அல்ல. அதன் விலை, அளவு, பயன் ஆகியவற்றை பார்க்க வேண்டியது அவசியம். அந்தவகையில், ரூ. 5000 -க்கும் குறைவான 6 ஏர் கூலர் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
Crompton Ginie Neo 10 L Personal Air cooler : இந்த ஏர் கூலரின் விலை வெறும் ரூ.3999 தான். அமேசானில் இருந்து ஆர்டர் செய்யலாம். இதில், 10 லிட்டர் தொட்டி உள்ளது. இந்த குளிரூட்டி 5 நட்சத்திர மதிப்பீட்டில் வருகிறது. அதாவது மின்சார கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும். இது 35 அடி வரை காற்றை வீசக்கூடியது.
Sansui Zephyr 37 L Personal Air Cooler : இந்த ஏர் கூலரின் விலை வெறும் ரூ.4,499 தான். இதை நீங்கள் Flipkart இல் ஆர்டர் செய்யலாம். இதில், 37 லிட்டர் கொள்ளளவை கொண்ட தொட்டி உள்ளது. இது 28 அடி வரை காற்றை வீசக்கூடியது. அதில் டஸ்ட் ஃபில்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருக்கும் வீட்டிற்கு சிறந்தது.
Yeti Cube 40 L Tower Air Cooler : இந்த குளிரூட்டியை Flipkart இலிருந்து வெறும் ரூ.4,099-க்கு வாங்கலாம். இதன் டேங்க் கொள்ளளவு 40 லிட்டர். கீழே 4 சக்கரங்கள் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக மாற்றலாம். தேன்கூடு குளிரூட்டும் பட்டைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இது 16 அடி வரை காற்றை வீசக்கூடியது.
Bajaj PMH 25 DLX 24L Personal Air Cooler : பஜாஜின் நம்பிக்கையுடன் வரும் இந்த குளிரூட்டியின் விலை ரூ. 4299 மட்டுமே. இதை நீங்கள் அமேசானில் இருந்து வாங்கலாம். இதன் தொட்டி 24 லிட்டர் கொள்ளளவு உடையது. இது 18 அடி வரை காற்றை வீசக்கூடியது. கீழே சக்கரங்களும் உள்ளன. இது ஓவர்ஃப்ளோ இண்டிகேட்டருடன் வருகிறது.