முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » அசத்தலான லுக்.. சூப்பர் கேமரா.. Redmi Note 12 4G மொபைலின் சிறப்பம்சங்கள்!

அசத்தலான லுக்.. சூப்பர் கேமரா.. Redmi Note 12 4G மொபைலின் சிறப்பம்சங்கள்!

xiaomi redmi : ரெட்மி நிறுவனம் தனது Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் நோட் 12 லைன்அப்பானது தற்போது மொத்தம் 4 மாடல்களை கொண்டுள்ளது.

  • 17

    அசத்தலான லுக்.. சூப்பர் கேமரா.. Redmi Note 12 4G மொபைலின் சிறப்பம்சங்கள்!

    ரெட்மி நிறுவனம் தனது Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் நோட் 12 லைன்அப்பானது தற்போது மொத்தம் 4 மாடல்களை கொண்டுள்ளது. இதில் ரெட்மி நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி, நோட் 12 ப்ரோ+ 5ஜி மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட ரெட்மி நோட் 12 4ஜி உள்ளிட்டவை அடக்கம். இந்த லைன்அப்-பில் விரைவில் மேலும் 2 மாடல்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாம் இங்கே Redmi Note 12 4G மொபைலை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    அசத்தலான லுக்.. சூப்பர் கேமரா.. Redmi Note 12 4G மொபைலின் சிறப்பம்சங்கள்!

    ரெட்மி நோட் 12 4ஜி மொபைலின் விலை : ரெட்மி நோட் 12 4ஜி மொபைலின் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.20,400-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் அறிமுக சலுகையாக இந்த வேரியன்ட் ரூ.17,700-க்கு கிடைக்க கூடும். இதற்கிடையே 4GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 22,200-ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    அசத்தலான லுக்.. சூப்பர் கேமரா.. Redmi Note 12 4G மொபைலின் சிறப்பம்சங்கள்!

    ஸ்பெக் மற்றும் அம்சங்கள் : Redmi Note 12 4G மொபைலானது 6.67-இன்ச் ஃபுல் -HD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 240Hz டச் சேம்பிளிங் வீதத்தை கொண்டுள்ளது. இந்த மொபைலின் டிஸ்ப்ளே 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸை சப்போர்ட் செய்வதாக கூறப்படுகிறது. இந்த டிவைஸ் Android 13-ல் MIUI 14 உடன் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் Adreno 610 GPU உடன் 6nm octa-core Qualcomm Snapdragon 685 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    அசத்தலான லுக்.. சூப்பர் கேமரா.. Redmi Note 12 4G மொபைலின் சிறப்பம்சங்கள்!

    மேலும் இந்த ஃபோனில் 8GB வரை LPDDR4X ரேம் மற்றும் 128GB வரை UFS2.2 ஸ்டோரேஜ், மைக்ரோ-SD கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கம் செய்து கொள்ள கூடிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலின் பின்பறத்தில் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் Samsung JN1 பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    அசத்தலான லுக்.. சூப்பர் கேமரா.. Redmi Note 12 4G மொபைலின் சிறப்பம்சங்கள்!

    இந்த ஃபோனில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் உள்ளன மற்றும் GPS, Wi-Fi 802.11a/b/g/n/ac மற்றும் ப்ளூடூத் 5.0 இணைப்பு உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் சைட்-மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனரை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் எடை 183.5 கிராம் ஆகும். வரவிருக்கும் புதிய மொபைல் ஃபோன்களின் அப்டேட்டட் தகவல்களை வழங்கும் ஆன்லைன் வெப்சைட்டான gsmarena.com-ல் Redmi Note 12 4G மொபைலின் அன்பாக்சிங் போட்டோக்கள் மற்றும் போனின் லுக் எப்படி இருக்கிறது என்பது பற்றிய ரிவ்யூ வெளியிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    அசத்தலான லுக்.. சூப்பர் கேமரா.. Redmi Note 12 4G மொபைலின் சிறப்பம்சங்கள்!

    இந்த வெப்சைட் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த மொபைலானது இது ஒரு கேஸ், USB கேபிள் மற்றும் 33W சார்ஜருடன் வருகிறது.  இந்த மொபைல் 6.67-இன்ச் 120Hz Super AMOLED டிஸ்ப்ளேவுடன் உள்ளதாக கூறி இருக்கும் gsmarena.com, 33W சார்ஜிங் சப்போர்ட்டுடன் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 5,000mAh பேட்டரி சுமார் 22 நிமிடங்களில் 0% முதல் 50% வரை சார்ஜாகிவிடுவதாக Xiaomi கூறி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    அசத்தலான லுக்.. சூப்பர் கேமரா.. Redmi Note 12 4G மொபைலின் சிறப்பம்சங்கள்!

    Redmi Note 12 4G ஒரு பெரிய டிவைஸ் என்றாலும் 184g எடை கொண்டு லைட் வெயிட்டாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மொபைலின் தட்டையான பக்கங்கள் இதை ஒரு கம்ஃபர்டபிள் போனாக மாற்றுவதோடு மேட்-ஃபினிஷ் செய்யப்பட்ட இதன் பாடி பெரும்பாலான நேரங்களில் ஃபிங்கர் பிரின்ட் மொபைலின் மேல் படியாமல் பார்த்து கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES