முகப்பு » புகைப்பட செய்தி » Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியீடு..! தேதியை அறிவித்த நிறுவனம்..

Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியீடு..! தேதியை அறிவித்த நிறுவனம்..

புதிய அல்ட்ரா போனில் பயன்படுத்தப்பட்டுள்ள லெய்கா கேமராக்கள் நிச்சயமாக ஒரு பேசும் பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் Snapdragon 8 Gen 2 சிப்செட் மற்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஜயண்ட் கேமரா மாடியூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • 16

    Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியீடு..! தேதியை அறிவித்த நிறுவனம்..

    Xiaomi 13 Ultra மொபைல் போனை ஏப்ரல் 18 அன்று வெளியிட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்வு சீனா மற்றும் உலக சந்தை அனைவருக்குமானது என்றும் கூறியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான Xiaomi 12S Ultra அனைவரையும் கவர்ந்த நிலையில், சியோமி மற்றும் லெய்கா எவ்வாறு கேமராவின் தரத்தை மேம்படுத்தி உள்ளது என்பதைக் காண பலரும் ஆவலாக உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 26

    Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியீடு..! தேதியை அறிவித்த நிறுவனம்..

    Xiaomi 13 Pro ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்பட்ட சென்சார்களை காட்டிலும் இந்த போனில் புதிய லெய்கா லென்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் உறுதி அளித்துள்ளது. Xiaomi 13 Pro ஸ்மார்ட் போனில் என்ன மாதிரியான அம்சங்களை நாம் எதிர்ப்பார்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    MORE
    GALLERIES

  • 36

    Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியீடு..! தேதியை அறிவித்த நிறுவனம்..

    ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் Xiaomi 13 Ultra போனில் என்னென்ன அம்சங்களை எதிர்ப்பார்க்கலாம்? : புதிய அல்ட்ரா போனில் பயன்படுத்தப்பட்டுள்ள லெய்கா கேமராக்கள் நிச்சயமாக ஒரு பேசும் பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இதில் Snapdragon 8 Gen 2 சிப்செட் மற்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஜயண்ட் கேமரா மாடியூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.Xiaomi 13 Ultra போனில் குவாட் ரேர் கேமரா செட்டப் மற்றும் ஃபிளாட் ஃபிரேம் கொண்ட டிஸ்ப்ளே உள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் சியோமி போனின் இந்த மாடலில் 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியீடு..! தேதியை அறிவித்த நிறுவனம்..

    அது மட்டும் இல்லாமல் இந்த பேகேஜூடன் ஒரு இன்ச் சோனி IMX989 சென்சாரும் கிடைக்கிறது. இது போக கேமராவில் இன்னும் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை நாம் காத்திருந்து தான் காண வேண்டும்.இந்த போனில் 90W வையர்டு சார்ஜிங் மற்றும் 50W வையர்லெஸ் சார்ஜிங்குடன் கூடிய 4900mAh பேட்டரி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2K AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியீடு..! தேதியை அறிவித்த நிறுவனம்..

    Xiaomi 13 Ultra இந்தியாவில் எப்போது வெளியாகிறது? : இந்தியாவில் சியோமி சமீபத்தில் தனது 13 Pro ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஆகையால், Xiaomi 13 Ultra இப்போதைக்கு இந்தியாவில் வெளியிடப்படாது என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 66

    Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியீடு..! தேதியை அறிவித்த நிறுவனம்..

    அதோடு எந்த ஒரு வெளியீட்டிற்கு முன்பும் நிறுவனம் சமூக வலைதளத்தில் சூப்பர் ஆக்டிவாக காணப்படும். ஆனால் இந்திய ஹேண்டில்களைப் பொறுத்தவரை அப்படி எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. மேலும் Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியிடப்படாது என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது. இது குறித்து சியோமி நிறுவனம் தான் பதில் கூற வேண்டும்.

    MORE
    GALLERIES