முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ஐபோன் ரேஞ்சுக்கு சியோமி போன்? தலைசுற்ற வைக்கும் விலை!

ஐபோன் ரேஞ்சுக்கு சியோமி போன்? தலைசுற்ற வைக்கும் விலை!

Xiaomi நிறுவனம் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது பிரீமியம் கேமரா மொபைலான Xiaomi 13 Ultra-ஐ சீனாவில் வெளியிட்டு உள்ளது.

 • 16

  ஐபோன் ரேஞ்சுக்கு சியோமி போன்? தலைசுற்ற வைக்கும் விலை!

  பல தகவல்கள் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கஸ் லீக்காகி இருந்த நிலையில் சமீபத்தில் Xiaomi 13 Ultra ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Xiaomi நிறுவனம் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது பிரீமியம் கேமரா மொபைலான Xiaomi 13 Ultra-ஐ சீனாவில் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் இந்த மொபைல் எப்போது கிடைக்கும் என்பது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

  MORE
  GALLERIES

 • 26

  ஐபோன் ரேஞ்சுக்கு சியோமி போன்? தலைசுற்ற வைக்கும் விலை!

  இதற்கிடையே புதிய Xiaomi 13 Ultra-வை தவிர நிறுவனம் Xiaomi Pad 6 சீரிஸ், Smart Band 8 உள்ளிட்ட பலவற்றையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. சரி, இப்போது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 13 Ultra மொபைலின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். புத்தம் புதிய Xiaomi 13 Ultra மொபைலானது ஒரு அழகான 6.73-இன்ச் குவாட் HD+ (3200 x 1440p) AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. Xiaomi 13 Ultra என்பது Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் மூலம் இயங்கும் நிறுவனத்தின் பிரீமியம் ஃபோன் ஆகும். இது 12-பிட் டிஸ்ப்ளேவுடன் LTPO சப்போர்ட்டுடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  ஐபோன் ரேஞ்சுக்கு சியோமி போன்? தலைசுற்ற வைக்கும் விலை!

  Xiaomi 13 Ultra மொபைலின் அம்சங்கள் : இந்த புதிய மொபைல் 6.73-இன்ச் 2K AMOLED LPTO டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த மொபைலின் ஸ்க்ரீனானது HDR10+ ரெசல்யூஷன், Dolby Vision, P3 கலர் கேமட், 1920Hz PWM டிம்மிங் மற்றும் 2600நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைல் கர்வ்டு எட்ஜஸ் கொண்டுள்ளது மற்றும் முன்பக்கத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொட்டக்ஷனை கொண்டுள்ளது. இதன் பின்புறம் பிரீமியம் லெதர் ஃபினிஷ் கொடுக்கப்பட்டு உள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  ஐபோன் ரேஞ்சுக்கு சியோமி போன்? தலைசுற்ற வைக்கும் விலை!

  இந்த மொபைலின் பின்புறத்தில் குவாட் கேமரா செட்டப் உள்ளது. ஹைப்பர்-ஓஐஎஸ், 8பி லென்ஸ், ஈஐஎஸ் கொண்ட 50MPசோனி ஐஎம்எக்ஸ்989 பிரைமரி கேமரா உள்ளது. தவிர மெயின் சென்சார் 50MP சோனி IMX858 அல்ட்ராவைடு கேமரா, OIS உடன் 50MP சூப்பர் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக இதன் முன்பக்கம் 32MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Android 13 அடிப்படையிலான MIUI 14-ல் இயங்கும் இந்த மொபைல் பிளாக், ஆலிவ் கிரீன் மற்றும் ஒயிட் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 56

  ஐபோன் ரேஞ்சுக்கு சியோமி போன்? தலைசுற்ற வைக்கும் விலை!

  மேலும் சீனாவில் இந்த மொபைல் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ், 16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் என 3 வேரியன்ட்ஸ்களில் கிடைக்கிறது. இந்த டிவைஸ் 5,000mAh பேட்டரி பேக் மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்திற்கான சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த மொபைலின் பிற அம்சங்களில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டால்பி அட்மோஸ், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் அடக்கம்.

  MORE
  GALLERIES

 • 66

  ஐபோன் ரேஞ்சுக்கு சியோமி போன்? தலைசுற்ற வைக்கும் விலை!

  விலை விவரங்கள் : இந்த மொபைலின் 12GB ரேம் + 256GB வேரியன்ட்டின் விலை பிந்தைய மதிப்பில் தோராயமாக ரூ.71,600 ஆகும். 16GB + 512GB மற்றும் 16GB + 1TB வேரியன்ட்ஸ்களின் விலைகள் முறையே இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.77,600 மற்றும் ரூ.87,071 ஆகும்.

  MORE
  GALLERIES