முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » நச்சுனு 3 கேமரா.. கிளாரிட்டி வேற லெவல்.. விலையில் தலைசுற்ற வைக்கும் சியோமி மாடல் போன்கள்!

நச்சுனு 3 கேமரா.. கிளாரிட்டி வேற லெவல்.. விலையில் தலைசுற்ற வைக்கும் சியோமி மாடல் போன்கள்!

வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான அனுபவத்தை தரக் கூடிய வகையில் ஸ்நாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 இந்த ஃபோன்களில் ப்ராசெஸ்ஸாராக பயன்படுத்தப்பட்டுள்ளது.

 • 15

  நச்சுனு 3 கேமரா.. கிளாரிட்டி வேற லெவல்.. விலையில் தலைசுற்ற வைக்கும் சியோமி மாடல் போன்கள்!

  ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில், உலக மொபைல் சங்கம விழா பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் ஸியோமி 13 சீரிஸ் ஃபோன்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. சியோமி 13 ப்ரோ மற்றும் ஸியோமி 13 ஆகிய இரண்டுமே சியோமி நிறுவனத்தின் தனித்துவமிக்க தயாரிப்புகள் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 25

  நச்சுனு 3 கேமரா.. கிளாரிட்டி வேற லெவல்.. விலையில் தலைசுற்ற வைக்கும் சியோமி மாடல் போன்கள்!

  இந்த இரண்டிலுமே லெய்க்கா திறன் கொண்ட கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான அனுபவத்தை தரக் கூடிய வகையில் ஸ்நாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 இந்த ஃபோன்களில் ப்ராசெஸ்ஸாராக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸியோமி 13 மற்றும் 13 ப்ரோ ஆகிய இரண்டிலுமே ஃபோட்டோகிராஃபி அனுபவத்தை தனித்துவமாக்கும் வகையில் லெய்க்கா ஆப்டிக்கல் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  நச்சுனு 3 கேமரா.. கிளாரிட்டி வேற லெவல்.. விலையில் தலைசுற்ற வைக்கும் சியோமி மாடல் போன்கள்!

  ஸியோமி 13 - உலகளாவிய விலை  : ஸியோமி 12 ப்ரோ விலை 1,299 யூரோக்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 1.13 லட்சம் ஆகும். அதேபோல ஸியோமி 12 ஃபோனின் விலை 999 யூரோக்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.87 ஆயிரம் வருகிறது. ஸியோமி 13 லைட் வெர்சன் ஃபோனின் விலை 499 யூரோக்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.43 ஆயிரம் ஆகும். ஸியோமி 13 சீரிஸ் ஃபோன்கள் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தேதி குறித்து இதுவரை விவரம் வெளியாகவில்லை.

  MORE
  GALLERIES

 • 45

  நச்சுனு 3 கேமரா.. கிளாரிட்டி வேற லெவல்.. விலையில் தலைசுற்ற வைக்கும் சியோமி மாடல் போன்கள்!

  ஸியோமி 13 - சிறப்பம்சங்கள் : ஸியோமி 12 ஃபோனில் 6.3 இன்ச் நீளம் கொண்ட எஃப்ஹெச்டி+ அமோல்டு டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இதன் ரெஃப்ரெஷிங் ரேட் 120 ஹெட்ஸ் ஆகும். டால்ஃபி விஷன் கொண்ட ஸ்கிரீனிங் வசதி, அலுமினியம் பிரேம் ஆகியவற்றை கொண்ட இந்த ஃபோனின் எடை 189 கிராம் ஆகும். இவற்றுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 இடம்பெற்றுள்ளது.இதில் 50 எம்பி மெயின் கேமரா, 10 எம் டெலிஃபோட்டோ கேமரா, 3.2 எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் போன்ற வசதிகள் உள்ளன. செல்ஃபி கேமரா 32 எம்பி ஆகும். இதன் பேட்டரி திறன் 4,500 எம்ஏஹெச் ஆகும். 67 வாட்ஸ் ஸ்பீடு சார்ஜிங் உடையது.

  MORE
  GALLERIES

 • 55

  நச்சுனு 3 கேமரா.. கிளாரிட்டி வேற லெவல்.. விலையில் தலைசுற்ற வைக்கும் சியோமி மாடல் போன்கள்!

  ஸியோமி 13 ப்ரோ - சிறப்பம்சங்கள் : இதிலும் 6.7 இன்ச் அளவு ஸ்க்ரீன் கொண்ட க்யூஹெச்டி+ அமோல்டு டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. 120 ஹெட்ஸ் ரிஃப்ரெஷிங் ரேட், டால்ஃபி விஷன் போன்ற அம்சங்கள் உள்ளன. அதே அலுமினியம் பிரேம் கொண்ட இந்த ஃபோனின் எடை 229 கிராம் ஆகும்.இதில் 50 எம்பி ட்ரிபிள் கேமரா மற்றும் சோனி சென்சார், 50 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ், 3.2 ஆப்டிக்கல் ஜூம் போன்ற வசதிகள் உள்ளன. செல்ஃபி கேமராவின் திறன் 32 எம்பி ஆகும். இதன் பேட்டரி திறன் 4,820 எம்ஏஹெச் ஆகும். இது 120 வாட்ஸ் ஸ்பீடு சார்ஜிங் கொண்டது.

  MORE
  GALLERIES