முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » பாஸ்வேர்ட் இனி இல்லை.. எதிர்காலத்தை நோக்கி நகரும் கூகுள்.. வருகிறது பாஸ்கீஸ்.!

பாஸ்வேர்ட் இனி இல்லை.. எதிர்காலத்தை நோக்கி நகரும் கூகுள்.. வருகிறது பாஸ்கீஸ்.!

பாஸ்கீஸ் என்பவை மூலம் பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகை கட்டமைக்க யூஸர்களுக்கு உதவுகிறது கூகுள்.

  • 16

    பாஸ்வேர்ட் இனி இல்லை.. எதிர்காலத்தை நோக்கி நகரும் கூகுள்.. வருகிறது பாஸ்கீஸ்.!

    சமீபத்தில் உலக பாஸ்வேர்ட் தினம் (World Password Day) அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் யூஸர்கள் பாஸ்கீஸ் (Passkeys) பயன்படுத்தி ஆப்ஸ்கள் மற்றும் வெப்சைட்களில் விரைவில் Sign in செய்ய முடியும் என தகவல் தெரிவித்து உள்ளது. World Password Day-யானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வியாழனன்று கொண்டாடப்படுகிறது. ஹேக்கர்களிடமிருந்து தங்கள் ஆன்லைன் அக்கவுண்ட்ஸ்களை பாதுகாக்க, தாங்கள் பயன்படுத்தும் கடவுச்சொற்களின் வலிமை மற்றும் பாதுகாப்பை மதிப்பிட அனைத்து யூஸர்களையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 26

    பாஸ்வேர்ட் இனி இல்லை.. எதிர்காலத்தை நோக்கி நகரும் கூகுள்.. வருகிறது பாஸ்கீஸ்.!

    இந்நிலையில்தங்களின் இந்த நடவடிக்கை "பாஸ்வேர்ட் இல்லா எதிர்காலத்தை" (Passwordless Future) நோக்கிய ஒரு முக்கிய படியாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது. பாஸ்கீஸ் என்பவை மூலம் பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகை கட்டமைக்க யூஸர்களுக்கு உதவுகிறது கூகுள். " Beginning of the end of the password " என்ற கேப்ஷனிட்டு ஒரு பிளாக் போஸ்ட்-ஐ கூகுள் ஷேர் செய்து உள்ளது. முக்கிய பிளாட்ஃபார்ம்களில் உள்ள அனைத்து அக்கவுண்ட்ஸ்களிலும் பாஸ்கீ-க்களுக்கான சப்போர்ட்டை படிப்படியாக வெளியிட்டு வருவதாக கூகுள் கூறி இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 36

    பாஸ்வேர்ட் இனி இல்லை.. எதிர்காலத்தை நோக்கி நகரும் கூகுள்.. வருகிறது பாஸ்கீஸ்.!

    கூகுளின் இந்த முயற்சி யூஸர்களை ஹேக்கிங் சிக்கலில் இருந்து பாதுகாக்கும். இதனிடையே கூகுளின் சமீபத்திய இந்த Blog post-ஆனது, உலக பாஸ்வேர்ட் தினத்திற்கு ருநாள் முன்னதாக வெளியிடப்பட்டது.இது அனைத்து இன்டர்நெட் யூஸர்களும் தங்கள் பாஸ்வேர்ட்களை மதிப்பிடுவதற்கான சரியான நேரத்தில் செய்யப்பட்டுள்ள நினைவூட்டலாக அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    பாஸ்வேர்ட் இனி இல்லை.. எதிர்காலத்தை நோக்கி நகரும் கூகுள்.. வருகிறது பாஸ்கீஸ்.!

    கூகுளின் இந்த சமீபத்திய Blog Post-ல், கடந்த சில காலமாக கூகுளும் தொழில்துறையில் உள்ள மற்ற முக்கிய நிறுவனங்களும் பாஸ்வேர்ட்-க்கு ஒரு எளிய மற்றும் பாதுகாப்பான மாற்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த வேலை செய்து வருகிறோம். பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பாஸ்வேர்ட்ஸை விட பாஸ்கீஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் சைபர் தாக்குதல்களைத் தடுக்கவும் உதவும். தற்போது புழக்கத்தில் உள்ள Password முறையானது, தவறான நபர்களின் கைகளுக்கு சென்றால் உங்களை பெரும் ஆபத்தில் சிக்க வைக்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    பாஸ்வேர்ட் இனி இல்லை.. எதிர்காலத்தை நோக்கி நகரும் கூகுள்.. வருகிறது பாஸ்கீஸ்.!

    Sign in செய்வதில் பாஸ்வேர்ட்ஸ், 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் உள்ளிட்டவற்றுடன் யூஸர்கள் பயன்படுத்தக்கூடிய கூடுதல் ஆப்ஷனாக பாஸ்கீஸ் இருக்கும் என கூகுள் குறிப்பிட்டுள்ளது.மேலும் அடுத்த World Password Day-வின் போது யூஸர்களுக்கு அவர்களின் பாஸ்வேர்ட்ஸ் கூட தேவைப்படாமல் இருக்கலாம் எனவும் கூகுள் குறிப்பிட்டுள்ளது. Passkeys என்றால் என்ன என்பதையும் Google விளக்கி இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 66

    பாஸ்வேர்ட் இனி இல்லை.. எதிர்காலத்தை நோக்கி நகரும் கூகுள்.. வருகிறது பாஸ்கீஸ்.!

    யூஸர்கள் தங்கள் டிவைஸ்களை ஓபன் செய்யும் முறைகளான ஃபிங்கர் பிரின்ட், ஃபேஸ் ஸ்கேன் அல்லது ஸ்கிரீன் லாக் பின் போன்றவை மூலம் ஆப்ஸ் மற்றும் வெப்சைட்களில் Sign in செய்ய Passkeys அனுமதிக்கும். உங்கள் இமெயில், ஆன்லைன் பேங்க், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் சோஷியல் மீடியா போன்ற வெவ்வேறு அக்கவுண்ட்ஸ்களுக்கு வெவ்வேறு பாஸ்வேர்ட்களை பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்தினர். இல்லை என்றால் ஒரு சைபர் கிரிமினல் உங்களின் ஒரு பாஸ்வேர்ட்-ஐ பயன்படுத்தி உங்களின் அனைத்து அக்கவுண்ட்ஸ்களையும் எளிதாக அணுகிவிட முடியும் என எச்சரிக்கின்றனர்.

    MORE
    GALLERIES