தற்போதைய டிஜிட்டல் சகாப்தத்தில் மளிகைப் பொருட்கள் முதல் பணத்தை அனுப்புவது வரை அனைத்தும் ஆன்லைனிலேயே செய்யப்படுகின்றன. இதற்கு தடையற்ற, வேகமான மற்றும் பாதுகாப்பான இன்டர்நெட் கனெக்ஷன் இருப்பது மிகவும் முக்கியம். உங்கள் மொபைல் நெட் மூலம் டேட்டா பயன்படுத்தினாலும், வைஃபை (WiFi) கனெக்ஷன் பயன்படுத்துவது வேலையை எளிதாக மற்றும் விரைவாக முடிக்க உதவுகிறது.
உங்கள் வீட்டில் வைஃபை கனெக்ஷன் வைத்திருந்தால் அதை நீங்கள் ஹேக்கர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம். சாப்ட்வேர் பக்ஸ், சரியாக கான்ஃபிகர் செய்யப்படாத இன்டர்ஃபேஸ் போன்றவை உங்கள் வைஃபையை ஹேக்கர்கள் அணுக காரணமாகின்றன. எனவே உங்கள் வீட்டு நெட்வொர்க்கில் உள்ள செக்யூரிட்டி செட்டிங்ஸை அடிக்கடி தவறாமல் சரிபார்க்க வேண்டும். உங்கள் WiFi-யை ஏதேனும் ஹேக்கர் ஹேக் செய்து விட்டால் அதனுடன் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர்ஸ் , ஸ்மார்ட் போன்கள் அல்லது ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் என அனைத்தும் ஆபத்தில் சிக்க கூடும். எனவே உங்கள் WiFi-யை பாதுகாக்க உதவக்கூடிய சில டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ்களை பார்க்கலாம்.
வைஃபை மற்றும் அட்மின் பாஸ்வேர்டை மாற்றவும்: ப்ரீசெட் வைஃபை பாஸ்வேர்ட்ஸ் பாதுகாப்பற்றதாகவும், எளிதில் யூகிக்க கூடியதாகவும் இருப்பதால், ஹோம் ரவுட்டரின் செட் அப் முடிந்ததும் உடனடியாக வைஃபை பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது. உங்களது பாஸ்வேர்ட் சற்று சிக்கலானது மற்றும் அவ்வளவு எளிதில் அதை கண்டறிய முடியாது என்பதை உறுதிப்படுத்தவும். டிவைஸின் கான்ஃபிடென்ஷியல் செட்டிங்ஸ் மெனுவை அணுகுவதற்கான பாஸ்வேர்ட் பல ரவுட்டர்களுக்கு ஒரே மாதிரியாக இருப்பதால், அட்மின் பாஸ்வேர்ட்டை மாற்ற வேண்டும்.
நெட்வொர்க் பெயரை மாற்றலாம்: SSID எனப்படும் புதிய நெட்வொர்க் பெயர், உங்கள் WLAN-க்கு வழங்கப்பட வேண்டும். ஏனென்றால் இந்த பெயர் உற்பத்தியாளரால் கொடுக்கப்பட்டிருப்பதாலும், யாராலும் எளிதில் தெரிந்து கொள்ளப்படலாம் என்பதாலும் நெட்வொர்க் பெயரை மாற்றுவது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். உங்கள் பெயர், இருப்பிடம் அல்லது உங்கள் புதிய SSID என அனைவராலும் அறியப்படும் எந்த அடிப்படை விவரங்களையும் நீங்கள் உங்கள் வைஃபை (WiFi) கனெக்ஷனில் வைத்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
ரிமோட் அக்சஸை டிஸேபிள் செய்யுங்கள்: Remote access டிஸேபிள் செய்வது உங்கள் வைஃபை-யை பாதுகாப்பாக வைப்பதற்கான மற்றொரு முக்கிய படியாகும். ஹார்ட் டிரைவ்களை இன்டர்நெட்டுடன் இணைக்க அனுமதிக்கும் ரவுட்டர்கள் உள்ளன, மேலும் இது தாக்குதலின் புள்ளியாக கூட இருக்கலாம். எனவே செட்டிங்ஸ் மெனு சென்று ரிமோட் அக்சஸை டிஸேபிள் செய்யுங்கள்.
பயன்படுத்தாத போது WiFi-யை ஆஃப் செய்யவும்:
பயன்படுத்த தேவையில்லாத போது WiFi-யை ஆஃப் செய்யலாம். உங்கள் வேலை முடிந்தது நெட் தேவையில்லை என்னும் போது, இரவில் தூங்கும் போது அல்லது நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது WiFi-யை ஆஃப் செய்தால் உங்கள் டிவைஸ் இணைக்கப்படாது. இணைக்கப்படாத டிவைஸ்களை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முடியாது.