தொழில்நுட்பம் பல்வேறு விதங்களில் முன்னேறி வருகிறது. அதன் அடிப்படையில் செங்கல் அளவிற்கு இருந்த செல்போன் தற்பொழுது கைக்குள் அடங்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் முதன்முதலாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுக்கு நீக்க முடியாத பேட்டரிகளுடன் ஃபோன்களை தயாரித்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து நிறுவனத்தின் ஃபோன்களிலும் நீக்கக்கூடிய பேட்டரிகள் இருந்தன. ஸ்மார்ட்ஃபோனிலேயே இணைக்கப்பட்ட நீக்க முடியாத பேட்டரிகளுடன் போன்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு என்ன காரணம், இது நுகர்வோருக்கு நல்லதா அல்லது இதனால் ஏற்படும் அசௌகரியங்கள் என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.,
நீக்க முடியாத பேட்டரிகளால் ஏற்படும் நன்மைகள் : பேட்டரிகளால் ஏற்படும் அபாயம் தடுப்பு : பேட்டரிகளில் மெல்லிதான எலக்ட்ரோலைட் இருக்கும். இது ஏணோடு மற்றும் கேதோடு என்ற எலக்ட்ரான்களை உள்ளன. இதில் தான் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரோடுகள் நேரடியாக தொடர்பு கொள்ளும்பொழுது ஷார்ட் சர்க்யூட் ஆகி, அதிகப்படியான வெப்பத்தை உருவாக்கலாம். அது மட்டுமின்றி இதில் ஏற்படும் ரியாக்சன்கள் மூலம் பேட்டரி வெடித்துச் சிதறலாம். பேட்டரி தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் இந்த ஆபத்து இன்னும் நீங்கவில்லை. எனவே, தெரிந்தோ தெரியாமலோ யாரும் பேட்டரியை தவறாகக் கையாளக் கூடாது என்பதற்காக நீக்க முடியாத பேட்டரிகள் உருவாக்கப்பட்டன.
பேட்டரி சேதம் அடையாமல் பாதுகாப்பு : எதிர்பாராத விதமாக ஃபோன் கீழே விழுவதால், பேட்டரி கழன்று விழும் ஆபத்து உள்ளது. இதனால் பேட்டரி சேதமடையலாம். அது மட்டுமின்றி, ஃபோன் கீழே விழுந்தாலும் சேதமடையாமல் இருப்பதற்காக கடினமான பிளாஸ்டிக் கேஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் ஸ்மார்ட்போனின் எடை கணிசமாக அதிகரித்தத. எனவே எடையை குறைக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் போனுடன் இணைக்கப்பட்ட எடை குறைவான பேட்டரிகள் உருவாக்கப்பட்டன.
நீண்ட நேரம் சார்ஜ் : தற்போதைய ஸ்மார்ட்ஃபோன்களில் லித்தியம் அயன் மற்றும் லித்தியம் பாலிமர் பேட்டரிகள் உள்ளன இவை இரண்டுமே ஒரே சார்ஜிலேயே நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய தன்மையுடன் வருகிறது. தற்போது எல்லாருமே ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி வருவதால், அதாவது விழித்திருக்கும் நேரம் தவிர பல மணி நேரங்கள் ஸ்மார்ட்ஃபோன் உள்ளது. எனவே அதற்கு ஏற்றார்போல பேட்டரி டெக்னாலஜியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரம் சார்ஜ் நீடிக்கும் போன்களில நீண்ட நேரம் பயன்படுத்தப்பட வேண்டும் எனும் பொழுது அந்த அளவுக்கு பேட்டரியும் திறன் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எனவே முக்கியமான நேரத்தில், பாதியில் பேட்டரியை நீக்கி விட்டு மற்றொரு பேட்டரியை சேர்க்க வேண்டும் என்ற சூழ்நிலை நுகர்வோருக்கு ஏற்படக்கூடாது காரணமாகவே அதிக கெப்பாசிடி உள்ள பேட்டரிகள் ஃபோன்களுடன் இணைக்கப்பட்டன.
அதிக விலை, நவீன வசதிகளுடன் வரும் போது நீடித்த உழைப்பு தேவை : அதிக விலை கொடுத்து ஸ்மார்ட்ஃபோன்களை மக்கள் தற்போது வாங்குகிறார்கள். அதிக விலை கொடுத்து வாங்குவது எல்லா விதங்களிலும் ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்துவது எளிதாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றார் போல ஸ்மார்ட்ஃபோனில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீடித்து உழைக்க வேண்டும் மற்றும் கீழே விழுந்தால் சேதம் அடைய கூடாது, தண்ணீர் லேசாக பட்டால் எதுவும் ஆகக்கூடாது ஆகியவைதான் வாடிக்கையாளர்களின் குறைந்தப்பட்ச கோரிக்கை. இதற்கு ஏற்றார் போல இணைக்கப்பட்ட பேட்டரியுடன் ஃபோன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
டிராக்கிங் செய்ய உதவுகிறது : அனைத்து வகையான ப்ரீமியம் ஸ்மார்ட்ஃபோன்களும், திருடு போவதற்கான சாத்தியம் உள்ளது. ஒரு ஸ்மார்ட்ஃபோன் திருடு போவது என்பது ஒரு டிஜிட்டல் சாதனம், விலை மதிப்பான சாதனத்தின் பணம் இழப்பு மட்டும் கிடையாது. அந்த சாதனத்தில் இருக்கும் எல்லா வகையான தரவுகளும் திருடு போவதையும் குறிக்கிறது. தற்போது ஒரு சாதனம் திருடப் போனாலும் அந்த போனை ஆஃப் செய்து வைத்திருந்தாலும் அதை எளிதாக டிராக் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர். ஆனால் பேட்டரி நீக்கும் ஃபோன்களில், போனை டிராக் செய்ய முடியாது.
பேட்டரிகள் நீக்க முடியாத ஃபோன்களால் ஏற்படும் அசௌகரியங்கள் என்ன : இத்தகைய சாதனங்கள் சார்ஜ் செய்வதற்கு கணிசமான நேரத்தை எடுத்துக்கொள்ளும். நீண்ட நேரம் பயன்பாட்டுக்குப் பிறகு உங்கள் போன் குறிப்பிட்ட அளவு சார்ஜ் ஆக வேண்டும் என்றால் அதற்கு 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதுவே நீக்கக்கூடிய பேட்டரி இருந்தால் நீங்கள் மற்றொரு பேட்டரியை மாற்றுவதற்கு சில நொடிகள்தான் ஆகும். நீக்க முடியாத பேட்டரிகள் என்று வரும்பொழுது மூன்றாம் தரப்பு சர்வீஸ்கள் ஃபோனை சர்வீஸ் செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.