முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » 20% டூ 80%.. செல்போன் சார்ஜ் போடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? பேட்டரி லைஃப் வர இத செய்யுங்க!

20% டூ 80%.. செல்போன் சார்ஜ் போடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? பேட்டரி லைஃப் வர இத செய்யுங்க!

Smartphone : காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கும் வரை பயன்படுத்தி மொபைல் போனை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்..

  • 16

    20% டூ 80%.. செல்போன் சார்ஜ் போடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? பேட்டரி லைஃப் வர இத செய்யுங்க!

    நம்மில் பலரும் போனை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறோம். பலர் அவ்வப்போது போனை சார்ஜ் செய்யும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு கிட்டத்தட்ட 30 சதவீதம் சார்ஜ் குறைந்த உடனே மீண்டும் சார்ஜ் போட்டு விடுவோம். இன்னும் சிலரோ மொபைல் பேட்டரி முழுமையாக குறையும் வரை அதனை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு தான் அதை சார்ஜில் போடுவார்கள். மேலும் சிலர் இரவு முழுவதும் மொபைலை சார்ஜ் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 26

    20% டூ 80%.. செல்போன் சார்ஜ் போடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? பேட்டரி லைஃப் வர இத செய்யுங்க!

    உண்மையிலேயே நம்முடைய மொபைல் போன் அதிகமாக பயன்படுத்தி அது பழையதாகும் போது அதனுடைய பேட்டரி திறனும் குறைக்கிறது. ஆனால் நாம் மொபைல் போன் வாங்கிய சில நாட்களுக்குள்ளேயே பேட்டரி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருகிறது என்றால் போனின் அமைப்பில் அல்லது நாம் சார்ஜ் செய்யும் முறையிலும் ஏதோ தவறு உள்ளது என்று பொருள். மேலே கூறியப்படி அடிக்கடி போனை சார்ஜ் செய்வதும், சார்ஜ் முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 36

    20% டூ 80%.. செல்போன் சார்ஜ் போடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? பேட்டரி லைஃப் வர இத செய்யுங்க!

    உண்மையில் போனை சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு மீண்டும் சார்ஜில் போடுவதும், பிறகு மீண்டும் பயன்படுத்த தொடங்கி விட்டு சார்ஜ் சிறிது குறைந்ததும் மறுபடி சார்ஜில் போடுவது என்பது மிகவும் தவறான அணுகுமுறை. இன்றைய நவீன போன் பேட்டரியில் லித்தியம் மற்றும் அயான் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் வாழ்நாள் ஆனது இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை வரும். கிட்டத்தட்ட 300 இல் இருந்து 500 முறை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதன் பேட்டரி திறன் ஆனது 20% வரை குறைந்து விடும்..

    MORE
    GALLERIES

  • 46

    20% டூ 80%.. செல்போன் சார்ஜ் போடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? பேட்டரி லைஃப் வர இத செய்யுங்க!

    எனில் நாம் நம்முடைய போனை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். நமது போனை முழுமையாக சார்ஜ் செய்த பின்பு அதன் பேட்டரி 20%க்கு குறையும் வரை பயன்படுத்திய பின்பு, அதனை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அவ்வாறு சார்ஜ் போட்ட பின்பு அடிக்கடி அதனை சார்ஜில் இருந்து எடுத்து பயன்படுத்துவதையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 56

    20% டூ 80%.. செல்போன் சார்ஜ் போடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? பேட்டரி லைஃப் வர இத செய்யுங்க!

    உங்களுடைய மொபைல் பேட்டரி நீண்ட காலம் உழைக்க வேண்டும் எனில் அதன் பேட்டரி சதவீதமானது 20 சதவீதத்திற்கு குறைவாகவோ அல்லது 80 சதவீதத்திற்கு அதிகமாகவோ இருக்கும் போது சார்ஜில் போடக்கூடாது. ஏனெனில் லித்தியம் மற்றும் அயான் கொண்டு தயாரிக்கப்படும் பேட்டரிகள் அடிக்கடி முழுமையாக சார்ஜ் செய்வது கூடாது. அவ்வாறு அடிக்கடி முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் அவை சூடாகும் வாய்ப்புகள் உண்டு.

    MORE
    GALLERIES

  • 66

    20% டூ 80%.. செல்போன் சார்ஜ் போடுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? பேட்டரி லைஃப் வர இத செய்யுங்க!

    அதேசமயம் பேட்டரியின் சதவீதம் பூஜ்ஜியத்திற்கு வரும் வரையும் நாம் அதனை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பூஜ்ஜியத்திற்கு வரும் வரை நாம் மொபைலை சார்ஜ் போடாமல் இருந்தால் அவை பேட்டரி திறனை குறைத்து விடும். எனவே முடிந்த அளவு மேலே கூறிய அளவீட்டிலேயே நாம் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டும்.

    MORE
    GALLERIES