நமக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால், அது தொடர்பான நோட்டிபிக்கேஷன் (Notification) நமது மொபைலில் கிடைக்கும் வசதி ஏற்கனவே உள்ளது. அவ்வாறு வரும் செய்திகளுக்கு உள்ளே சென்று பார்க்காமல், நோட்டிபிக்கேஷனிலேயே பதிலளிக்கும் விதமாக (mark as read) மற்றும் (reply) என்கிற 2 ஷார்ட்கட் வசதிகள் ஏற்கனவே உள்ளன. அதாவது வாட்ஸ்அப்பை திறக்காமலேயே உங்களுக்கு வந்த மெசேஜிக்கு நோட்டிஃபிக்கேஷன் வழியாகவே ரிப்ளை (Reply) செய்யும் வசதி, அதை படிக்கும் (Marked as read) வசதியுடன் மேலுமொரு ஷார்ட்கட் அம்சம் அறிமுகமாகியிருக்கிறது.
அதென்ன ஷார்ட்கட்? : வாட்ஸ்அப்பில் ரிப்ளை மற்றும் மார்க்டு ஆஸ் ரீட் என்கிற 2 ஷார்ட்கட்களுடன் மேலும் ஒரு புதிய ஷார்ட்கட் வசதியான பிளாக் (Block) என்கிற மூன்றாவது ஷார்ட்கட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளாக்கிங் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். பிளாக் வசதி என்பது உங்களுக்கு தெரியாத அல்லது தேவை இல்லாத எண்ணில் இருந்து வந்த மெசேஜை திறந்து, குறிப்பிட்ட வாட்ஸ்அப் சாட்டிற்குள் (Chat) நுழைந்து, பின்னர் செட்டிங்ஸ்க்கு (Settings) சென்று, பிளாக் அம்சத்தை கிளிக் செய்வதற்கு பதிலாக, நேரடியாக நோட்டிஃபிக்கேஷன் வழியாகவே அந்த நம்பரை பிளாக் செய்யலாம். அறியாதோர்களுக்கு பிளாக் என்பது குறிப்பிட்ட வாட்ஸ்அப் தொடர்பை தடுக்கும் ஒரு அம்சம் ஆகும்.
இந்த பிளாக்கிங் வசதி அனைத்து எண்களுக்கும் பொருந்துமா? : இந்த பிளாக் ஷார்ட்கட் ஆனது ஒரு சந்தேகத்திற்குரிய எண்ணிலிருந்தோ அல்லது அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் லிஸ்டில் சேமிக்கப்படாத எண்ணில் (Unknown Numbers) இருந்து வரும் மெசேஜ்களின் நோட்டிபிக்கேஷன்களுக்கு மட்டுமே, இந்த ஷார்ட்கட் வசதி பயன்படுத்த முடியும். நீங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப் எண்களின் லிஸ்ட்டில் சேமித்து வைத்து இருக்கும் ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் வரும் போது, இந்த பிளாக் (block) ஷார்ட்கட் வசதி தோன்றாது. இந்த தகவலை WABetaInfo தெரிவித்துள்ளது.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்? : வாட்ஸ்அப்பின் இந்த பிளாக் வசதி தற்போது வரை சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது. அதாவது தற்போது வரையிலாக பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது. அவர்கள் இதில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது பிரச்சனைகள் உள்ளதா என்று கண்டுபிடித்து, அதைப்பற்றி புகார் அளித்த பின் அந்த குறைகள் சரிசெய்யப்படும். அதன் பிறகு பிளாக் செய்யும் வசதி அனைத்து யூசர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும்.