2021ம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. ஏற்கனவே வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது போல இந்த ஆண்டின் முடிவில், வாட்ஸ்அப்பின் மற்றொரு சப்போர்ட் சுழற்சியும் முடிவடைகிறது. ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் ஐபோன்களிலும் வாட்ஸ்அப் இனி வேலை செய்யாது என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.
எந்த மாடல் போன்களில் எல்லாம் வரும் நவம்பர் 1, 2021 முதல் வாட்ஸ்அப் செயலி சப்போர்ட் ஆகாது என்பதற்கான நீண்ட பட்டியலை வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பத்துறை மிகப் பெரிதாக வளர்ந்து விட்ட நிலையில் பழைய OS பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களிலும், ஆப்பிள் ஐபோன்களிலும் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.
ஆண்ட்ராய்டு போன்களில் ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் பயன்படுத்தும் மாடல்களிலும், ஆப்பிள் ஐபோன்களில் ஐஓஎஸ் 9 அல்லது அதற்கும் குறைவான ஐஓஎஸ் பயன்படுத்தும் மாடல்களிலும் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. நவம்பர் 1 முதல் வாட்ஸ்ஆப் சப்போர்ட் ஆகாத ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் பட்டியல் இங்கே.
எல்ஜி : பின்வரும் LG ஸ்மார்ட்போன்களில் உங்களால் வாட்சப்பைப் பயன்படுத்த முடியாது - LG Lucid 2, ஆப்டிமஸ் F7, ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L3 II Dual, ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L5, ஆப்டிமஸ் L5 II, ஆப்டிமஸ் L5 Dual, ஆப்டிமஸ் L3 II, ஆப்டிமஸ் L7, ஆப்டிமஸ் L7 II Dual, ஆப்டிமஸ் L7 II, ஆப்டிமஸ் F6, Enact, ஆப்டிமஸ் L4 II Dual, ஆப்டிமஸ் F3, ஆப்டிமஸ் L4 II, ஆப்டிமஸ் L2 II, ஆப்டிமஸ் Nitro HD மற்றும் 4X HD, மற்றும் ஆப்டிமஸ் F3Q.