இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மாக இருக்கும் WhatsApp-ஐ உலகம் முழுவதும் இருக்கும் மில்லியன்கணக்கான யூஸர்கள் தங்கள் மொபைலில் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பதில் துவங்கி பலனுள்ள பல தகவல்களை ஷேர் செய்து கொள்வது வரை தனிப்பட்ட நோக்கங்களுக்காக WhatsApp பயன்படுத்தப்பட்டு வந்தது ஒரு காலம்.
இப்போது வாட்ஸ்அப் யூஸர்கள் தங்களது அலுவலகம் சார்ந்த மற்றும் வணிகம் சார்ந்த விஷ்யங்களுக்காக அதிகம் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர். அலுவலகம் அல்லது தங்களது சொந்த தொழில் செய்யும் இடங்களில் யூஸர்கள் இருக்கும் போது பெரும்பாலான நேரங்களில் தங்களது மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்தாமல் கம்ப்யூட்டரில் whatsapp web-ஐ பயன்படுத்துகின்றனர்.
ஏனெனில் WhatsApp Web அம்சமானது யூஸர்கள் தங்கள் முழு WhatsApp விஷயங்களையும் பெரிய திரையில் அனுபவிக்க உதவுகிறது. நீங்கள் மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது சிறிய ஸ்கிரீனில் செய்யும் அனைத்தையும் பெரிய ஸ்கிரீனில் செய்ய whatsapp web உதவுகிறது. இதற்கு நீங்கள் முதலில் https://web.whatsapp.com/-ற்கு செல்ல வேண்டும். இப்போது சிஸ்டமின் வலது பக்கத்தில் ஸ்கேன் செய்வதற்கு QR கோட் ஒன்று தெரியும். உங்களது மொபைல் வாட்ஸ்அப் சென்று வலது மூலையில் இருக்கும் 3 டாட்ஸ் ஐகானை க்ளிக் செய்து Linked devices ஆப்ஷனை தேர்வு செய்து, பின் Link a device ஆப்ஷனை டேப் செய்ய வேண்டும். பிறகு சிஸ்டமில் தெரியும் QR கோட்-ஐ ஸ்கேன் செய்வதற்கான ஆப்ஷன் வரும். சிஸ்டமில் தோன்றும் QR Code-ஐ ஸ்கேன் செய்த பிறகு, உங்களது மொபைல் வாட்ஸ்அப்-ஐ அப்படியே சிஸ்டம் ஸ்கிரீனில் பயன்படுத்தி கொள்ளலாம்.
எனினும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாத காரணத்தால் வாட்ஸ்அப் வெப்-ல் லாகின் செய்ய முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் சில நேரங்களில் ஏற்படுகின்றன. சில நேரங்களில் வாட்ஸ்அப்பின் வெப் QR code லோடாகாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே இங்கு WhatsApp Web-ல் ஏற்படும் QR code தொடர்பான சிக்கல் அல்லது WhatsApp Web-ல் வேலிட்டான QR Code தோன்றாத சூழலை தீர்ப்பதற்கான சாத்திய வழிகளை இங்கே பார்க்கலாம்.
பில்ட்-இன் வாட்ஸ்அப் க்யூஆர் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யவும் : வாட்ஸ்அப் வெப் QR code-ஆனது பில்ட்-இன் QR code ஸ்கேனர் மூலம் மட்டுமே இயங்கும். ஆராய்ச்சியின் படி, இது தெரியாமல் சில யூஸர்கள் ரேண்டம் QR code ஸ்கேனரை பயன்படுத்தி வாட்ஸ்அப் வெப்-ன் QR code-ஐ ஸ்கேன் செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் வாட்ஸ்அப் வெப் அம்சத்தை பயன்படுத்த முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
இன்டர்நெட் கனெக்ஷன் & ஸ்பீடை செக் செய்யவும் : மேலே உள்ள டிப்ஸ்கள் உங்களுக்கு உதவவில்லை என்றால் யூஸர்கள் தாங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் கனெக்ஷன் மற்றும் அதன் ஸ்பீடை சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் QR Code ஸ்கேன் செய்த பிறகு உங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை அணுக எப்போதும் நல்ல இன்டர்நெட் கனெக்ஷன் தேவை. நெட்வொர்க் குவாலிட்டியை சரிபார்க்க நீங்கள் speed test செய்யலாம்.
எப்போதாவது மட்டுமே பயன்படுத்தும் லிங்க்ட் டிவைஸை ரிமூவ் செய்யவும் : WhatsApp யூஸர்கள் ஒரு அக்கவுண்ட்டிலிருந்து 4 டிவைஸ்களை கனெக்ட் செய்ய முடியும். உங்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி WhatsApp Web QR Code-ஐ ஸ்கேன் செய்ய முடியாவிட்டால், நீங்கள் அரிதாக பயன்படுத்தும் Linked device-ஐ அகற்றுவது நல்லது.