தொழில்நுட்ப சேவைகள் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நிலையில், பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஆப்பிள் பயனாளர்களுக்கு 2 ஜிபி வரையிலான டாக்குமெண்டுகளை பகிர்ந்து கொள்வதற்கான வசதியை வாட்ஸ் அப் வெகுவிரைவில் அப்டேட் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், “இந்த அப்டேட் என்பது முற்றுலும் புதிதானது அல்ல. ஏற்கனவே கடந்த குரூப் ஒன்றில் 512 உறுப்பினர்கள் வரை இணைப்பதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்த அப்டேட்டும் வெளியானது. ஐஃபோன்களுக்கான வாட்ஸ் அப் பேட்டா 23.3.0.76இல் இந்த வசதியை பெற இயலும். அதேபோன்ற வசதி பேட்டா அல்லாத ஐஃபோன் பயனாளர்களுக்காக எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது’’ என்றும் WABetaInfo தெரிவித்துள்ளது.
பெரிய அளவிலான டாக்குமெண்டுகளை விரைவாக அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக வைஃபை இணைப்பின் கீழ் வாட்ஸ் அப் பயன்படுத்துவது பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பெரிய அளவிலான டாக்குமெண்டுகளை நீங்கள் மொபைல் டேட்டா பயன்படுத்தி அனுப்பும்போது, அதிக அளவிலான டேட்டா மிக விரைவாக தீர்ந்து விடும். அத்தகைய சூழலில் மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து விட்டு, வைஃபை மூலமாக அனுப்பினால் மொபைல் டேட்டாவை பெரிய அளவில் சேமிக்க முடியும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.
இன்னும் புதிய வசதிகள் அறிமுகம் : பயனாளர்களுக்கான வேறுபல வசதிகளையும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டாக்குமெண்ட் கேப்சன், நீண்ட குரூப் சப்ஜெட்டுகள், டெஸ்கிரிப்ஷன், ஒரே சமயத்தில் 100 மீடியா மற்றும் அவதார்களை பகிர்வதற்கான வசதி போன்றவை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய நிலையில் பிளே ஸ்டோரில் இருந்து லேட்டஸ்ட் வெர்சன் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு இந்த வசதிகள் ஏற்கனவே கிடைக்கப் பெறுகிறது.