உலக அளவில் வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முன்னிலையில் இருக்கிறது இந்தியா. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் வாட்ஸ்அப்பை தான் முதன்மை தகவல் தொடர்பு செயலியாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் வாட்ஸ்அப் அவ்வப்போது தங்கள் யூசர்களுக்கு ஏற்ப அப்டேட்டுகளை அளித்து அவர்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறது.
சமீபத்தில் தான் ஐஓஎஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் யூசர்களுக்கு பிக்சர் இன் பிக்சர் மோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி வாட்ஸ்அப் டெக்ஸ்ட் எடிட்டர் என்ற புதிய வசதியை வருங்கால அப்டேட்டில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மூன்று வித ஆப்ஷன்கள் நமக்கு அளிக்கப்படும். பேக்ரவுண்ட் மாற்றிக் கொள்ளலாம். எழுத்துக்களின் வடிவத்தை மாற்றிக் கொள்ளலாம். மேலும் அதன் வரிசை அமைப்பையும் மாற்றிக் கொள்ளும் வசதிகள் இதில் அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்துக்கள் வடிவம் மாற்றம் : இந்த வசதி மூலம் எழுத்துக்களின் வடிவத்தை நம்மால் மிக எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். புதிதாக அளிக்கப்பட்டுள்ள ஃபாண்ட் ஆப்ஷனின் மீது டேப் செய்யும் போது அவற்றின் வடிவத்தை நமக்கு ஏற்றது போல் மாற்றிக் கொள்ள முடியும். இதனால் யூசர்கள் தங்களுக்கு பிடித்தது போல் விதம் விதமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் டெக்ஸ்ட் எடிட் செய்து கொள்ளலாம்.
இதற்கிடையில் வாட்ஸ்அப் ஆனது போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்பும்போது அதன் தரத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே தரத்தில் அனுப்புவதற்கான புதிய அப்டேட்டை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை வாட்ஸ்அப் மூலம் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் போது அதன் தரத்தில் சிறிதளவு இழப்பு ஏற்படுகிறது. வாட்ஸ்அப் இந்த புதிய அப்டேட்டை வெற்றிகரமாக செயல்படுத்தும் பட்சத்தில் இது ஒரு புதிய மைல் கல்லாக இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை.