முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » வாட்சப் மோசடியில் இருந்து பாதுகாக்கும் ட்ரூகாலர்..! இனி நோ டென்ஷன்..

வாட்சப் மோசடியில் இருந்து பாதுகாக்கும் ட்ரூகாலர்..! இனி நோ டென்ஷன்..

தற்போது வாட்சப் மோசடிகள் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இது நம் அனைவருக்கும் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாக இருப்பதோடு, ஒரு பெரும் பிரச்சனையாகவும் மாறி நம்மை அச்சுறுத்தி வருகிறது. வாட்சப் பயனர்களை இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாக்க ட்ரூகாலர் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

  • 16

    வாட்சப் மோசடியில் இருந்து பாதுகாக்கும் ட்ரூகாலர்..! இனி நோ டென்ஷன்..

    வாட்சப் போன்ற மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் தங்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் கண்டு கொள்ளும் சேவையை ட்ரூகாலர் நிறுவனம் வழங்க உள்ளது. தற்போது, வாட்சப்-ட்ரூகாலர் அம்சம் ஆனது பீட்டா கட்டத்தில் உள்ளது. இந்த அம்சத்தின் வரவால் வாட்சப் மோசடிகள் சற்று கட்டுக்குள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    வாட்சப் மோசடியில் இருந்து பாதுகாக்கும் ட்ரூகாலர்..! இனி நோ டென்ஷன்..

    நாம் அனைவரும் தகவல்களை பராமாரிக் கொள்வதற்கு பெரும்பாலும் வாட்சப் செயலியைத் தான் பயன்படுத்தி வருகிறோம். இதில் நாம் டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது வாய்ஸ் மெசேஜ் மூலம் உரையாடலாம். வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இது போன்ற எண்ணற்ற அம்சங்கள் இருப்பதால், வாட்சப் நம் அன்றாட பயன்பாட்டிற்கு உகந்ததாக அமைந்துள்ளது. இதன் பயன்பாடு அதிகரிக்கவே, இதனை ஒரு சிலர் மோசடிகள் செய்வதற்கு பயன்படுத்துவதும் அதிகரித்து உள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    வாட்சப் மோசடியில் இருந்து பாதுகாக்கும் ட்ரூகாலர்..! இனி நோ டென்ஷன்..

    ஆம், தற்போது வாட்சப் மோசடிகள் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இது நம் அனைவருக்கும் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாக இருப்பதோடு, ஒரு பெரும் பிரச்சனையாகவும் மாறி நம்மை அச்சுறுத்தி வருகிறது. வாட்சப் பயனர்களை இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாக்க ட்ரூகாலர் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    வாட்சப் மோசடியில் இருந்து பாதுகாக்கும் ட்ரூகாலர்..! இனி நோ டென்ஷன்..

    பொதுவாக நமக்கு ஸ்பேம் மெசேஜ் வந்தாலே கடுப்பாக இருக்கும். அது எரிச்சல் ஊட்டும் விதத்தில் இருப்பதோடு, பெருமபாலான நேரங்களில் ஆபத்தானதாகவும் இருக்கும். ஸ்பேம் என்றாலே மோசடி என்றாகிவிட்டது என்றும் நாம் சொல்லலாம். இந்தியாவில் மட்டும், ஒரு பயனர் சராசரியாக ஒரு மாதத்திற்கு 17 ஸ்பேம் அழைப்புகளைப் பெறுவதாக ட்ரூகாலர் 2021 ஆம் ஆண்டில் தெரிவித்தது. இது போன்ற ஸ்பேம் அழைப்புகள் ஆபத்தானதாகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும் இருப்பதால், வாட்சப்பில் வரும் ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் காணும் சேவையை ட்ரூகாலர் கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    வாட்சப் மோசடியில் இருந்து பாதுகாக்கும் ட்ரூகாலர்..! இனி நோ டென்ஷன்..

    ஆபத்து விளைவிக்கக் கூடிய ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் காணும் வகையில் மற்ற மெசேஜிங் செயலிகளும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது, வாட்சப்-ட்ரூகாலர் அம்சம் ஆனது பீட்டா கட்டத்தில் உள்ளது. இந்த அம்சமானது அனைவர்க்கும் கிடைக்கும் வகையில், மே மாதம் வழிவகை செய்யப்படும் என்று ட்ரூகாலர் நிறுவனத்தின் தலைவர் ஆன ஆலன் மமெடி தெரிவித்து உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 66

    வாட்சப் மோசடியில் இருந்து பாதுகாக்கும் ட்ரூகாலர்..! இனி நோ டென்ஷன்..

    ஸ்பேம் அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களை டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளை பிளாக் செய்யும் படி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டது. ஃபில்டர்கள் மூலம், அந்த நிறுவனங்கள் இதனை செய்ய திட்டமிட்டுள்ளன. அந்த சேவையை தாங்கள் வழங்குவதாகக் கூறி, ட்ரூகாலர் அந்த நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனவே, விரைவில் ஸ்பேம் தொல்லைக்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES