உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்ற செயலி தான் வாட்ஸ்அப். நண்பர்களுடன் உரையாடுதல், வாட்ஸ் வாய்ஸ் கால், வீடியோ கால், சேட்டிங், குரூப் சேட்டிங் போன்றவற்றிற்கு மக்கள் இன்றைக்கு வாட்ஸ்அப்பை நாடியுள்ளனர். குறிப்பாக மக்களிடம் தற்போது வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைக்கும் பழக்கம் என்பது அதிகமாகிவிட்டது.
சந்தோஷமோ? வருத்தமோ? எந்த மனநிலையில் இருந்தாலும் அதற்கேற்ற வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கத்தை மக்கள் வாடிக்கையாக்கி கொண்டனர். இவ்வாறு மக்களின் அத்தியாவசிய பயன்பாடுகளில் ஒன்றாக மாறிவிட்ட வாட்ஸ்அப்பின் நிறுவனமாக மெட்டா அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பல புதிய அம்சங்களைக் கொண்டுவந்துள்ள நிலையில், கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 5 சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
யூசர்களை தேர்வு செய்தல் : வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், என்ன புகைப்படம், வீடியோ வைக்கிறார்கள்? என்பதை பார்க்க ஒரு கூட்டம் இருக்கும். இருந்தப்போதும் அனைவரும் நம்முடைய ஸ்டேட்டஸைப் பார்ப்பது நமது பிடிக்காது. இது போன்றவற்றைத் தடுக்கும் விதமாகத் தான் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதன் படி யார் உங்களுடைய ஸ்டேடஸைப் பார்க்கலாம் என்பதை நீங்களே தேர்வு செய்துக்கொள்ள முடியும். Privacy settings என்ற ஆப்சன் உதவியோடு நீங்கள் இதை மேற்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் குரல் பதிவு : யூசர்கள் தங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் காதல் பாடல்களையும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் அல்லது எழுத்துக்கள் மூலம் 30 வினாடிகள் வரை பகிர்ந்துக் கொள்வார்கள். தற்போதுள்ள புதிய அப்டேட்டின் படி, இனி மேல் நீங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸில் உங்களது குரல் பதிவை 30 வினாடிகளுக்கு ஸ்டேட்டஸாக வைக்கலாம்.
வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்கள் : எமோஜிகளின் மூலம் மெசேஜ்களுக்கு ரியாக்சன் அனுப்புவது என்பது வாட்ஸ்அப் பயனர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் அம்சம் என்று கூறலாம். தற்போது நமக்கு வரக்கூடிய மெசேஜ்களை மேலே ஸ்வைப் செய்வதன் மூலம் எட்டு எமோஜிகளில் ஒன்றைத் தட்டி அனுப்பலாம். இதோடு ஆடியோ மற்றும் குரல் வழியாக பதிலளிக்கும் விருப்பமும் வாட்ஸ்அப் அப்டேட்டில் உள்ளது.