முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » அசரவைக்கும் புதிய அப்டேட்..! - வாய்ஸ் நோட்டுக்கு பதில் சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!

அசரவைக்கும் புதிய அப்டேட்..! - வாய்ஸ் நோட்டுக்கு பதில் சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!

ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியில் நீங்கள் பல்வேறு விதமான மொழிகளை தேர்வு செய்து கொள்ள முடியும். நீங்கள் தேர்வு செய்யும் மொழியின் அடிப்படையில், நீங்கள் கேட்கும் ஆடியோ ஆனது ட்ரான்ஸ்கிரிப்ஷன் செய்யப்படும்.

  • 16

    அசரவைக்கும் புதிய அப்டேட்..! - வாய்ஸ் நோட்டுக்கு பதில் சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!

    உலக அளவில் வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தகவல்கள் மற்றும் செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கும், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதற்கும் வாட்ஸ்அப்பை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஏற்ப அந்த நிறுவனமும் அவ்வபோது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய புதிய அப்டேட்டுகளை அளித்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    அசரவைக்கும் புதிய அப்டேட்..! - வாய்ஸ் நோட்டுக்கு பதில் சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!

    சமீபத்தில்தான் குழுவாக சேர்ந்து வீடியோ கால் பேசும் வசதியும், அதில் குறிப்பிட்ட ஒருவரை மட்டும் மியூட் செய்து கொள்ளும் வசதியையும் அந்நிறுவனம்அறிமுகம் செய்திருந்தது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளது போல வாட்ஸ்அப் கம்யூனிட்டி என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் யூசர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக உருவாக்கப்படும் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு கம்யூனிட்டியாக வைத்துக் கொள்ளலாம். மேலும் அந்த குழுக்களில் உள்ள அனைவருக்கும் ஒரு செய்தியை வெளியிட விரும்பினால், அந்த குறிப்பிட்ட கம்யூனிட்டியில் வெளியிட்டாலே அந்த கம்யூனிட்டியில் இணைந்திருக்கும் அத்தனை குழுக்களுக்கும் அந்த செய்தி சென்றடையும்.

    MORE
    GALLERIES

  • 36

    அசரவைக்கும் புதிய அப்டேட்..! - வாய்ஸ் நோட்டுக்கு பதில் சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!

    தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கக்கூடிய வாட்ஸ்அப்பின் (23.3.0.73) பீட்டா வெர்ஷனில் புதிய ஆடியோவை படியெடுக்கும் ட்ரான்ஸ்கிரிப்ஷன் எனப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்த பட இருக்கிறது. இன்னமும் கூட இந்த ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியை முழுமையாக அறிமுகப்படுத்துவதற்கான வேலையில்தான் அந்த நிறுவனம் முனைப்பாக வேலை செய்து வருகிறது. ஏற்கனவே அலுவலகம் சம்பந்தமாக பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் இந்த ட்ரான்ஸ்க்ரிப்ஷன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ கால்களிலும் அல்லது சாதாரண ஆடியோ கால்களிலும் எதிர்ப்பக்கம் பேசுபவருடைய பேச்சு எழுத்து வடிவத்தில் படியெடுக்கப்பட்டு திரையில் காண்பிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 46

    அசரவைக்கும் புதிய அப்டேட்..! - வாய்ஸ் நோட்டுக்கு பதில் சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!

    இந்த ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியில் நீங்கள் பல்வேறு விதமான மொழிகளை தேர்வு செய்து கொள்ள முடியும். நீங்கள் தேர்வு செய்யும் மொழியின் அடிப்படையில், நீங்கள் கேட்கும் ஆடியோ ஆனது ட்ரான்ஸ்கிரிப்ஷன் செய்யப்படும். அதாவது எந்த மொழியில் உங்களது ஆடியோ இருக்கின்றதோ அந்த மொழிக்கு நீங்கள் வாட்ஸ்அப் டிரான்ஸ்கிரிப்ஷன் வசதியை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வாட்ஸ்அப்பால் அந்த ஆடியோவை டிரான்ஸ்கிரிப்ஷன் செய்ய முடியாது.

    MORE
    GALLERIES

  • 56

    அசரவைக்கும் புதிய அப்டேட்..! - வாய்ஸ் நோட்டுக்கு பதில் சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!

    இந்த வசதியானது எப்போதும் அதிகாரப்பூர்வமாக யூசர்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்ற தெளிவான அறிவிப்பை வாட்ஸ்அப் இன்னும் அறிவிக்கவில்லை. வாட்ஸ் அப்பை பற்றிய தகவல்களை அவ்வப்போது அளித்து வரும் WABetainfo சமூக வலைதள பக்கத்தில் தான் இந்த செய்தியானது வெளியிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    அசரவைக்கும் புதிய அப்டேட்..! - வாய்ஸ் நோட்டுக்கு பதில் சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!

    உண்மையில் இது போன்ற அப்டேட் வரும் என்ற அறிவிப்பு இது முதல் முறையல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சமூக வலைதள பக்கத்தில் வாட்ஸ்அப் டிரான்ஸ்கிரிப்ஷன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES