கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ’வால் ஸ்ட்ரீட்’ எனும் புகழ்பெற்ற பத்திரிகையில் வெளியான கட்டுரையில் பாஜகவினரின் சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவுகள் விமர்சிக்கப்பட்டிருந்தன. அதில் இந்திய பேஸ்புக் நிர்வாகத்தில் உள்ளவர்கள் வெறுப்புப் பேச்சுகள் கொண்ட பதிவுகளை நீக்குவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பேஸ்புக் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறுப்பு பேச்சு எந்த வகையில் இருந்தாலும் அதனை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளதோடு, ”எங்கள் தளத்தில் வெறுப்புப் பேச்சுகளைக் கையாள்வதில் நாங்கள் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளோம். எனினும் நாங்கள் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.