முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » செல்போன் சார்ஜ்.. இப்படி செஞ்சா போன் சீக்கிரமே காலியாகிடும்.. நாம் செய்யும் தவறுகள் இதுதான்!

செல்போன் சார்ஜ்.. இப்படி செஞ்சா போன் சீக்கிரமே காலியாகிடும்.. நாம் செய்யும் தவறுகள் இதுதான்!

பெரும்பாலான நேரங்களில் உங்களது பேட்டரியை 30% முதல் 90% வரை சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். உங்களது மொபைல் போன் 20 சதவீதம் எட்டியவுடன் நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டும்.

 • 16

  செல்போன் சார்ஜ்.. இப்படி செஞ்சா போன் சீக்கிரமே காலியாகிடும்.. நாம் செய்யும் தவறுகள் இதுதான்!

  இன்றைக்கு தொழில்நுட்ப பயன்பாடு என்பது நம்மிடம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மொபைல் போன் குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு மக்களிடம் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி நாள் முழுவதும் மொபைல் போன்களை நாம் பயன்படுத்துவதால், மற்ற அனைத்து பேட்டரிகளைப் போல, மொபைல் போன் பேட்டரிகளும் காலப்போக்கில் சிதைவடைகின்றன.

  MORE
  GALLERIES

 • 26

  செல்போன் சார்ஜ்.. இப்படி செஞ்சா போன் சீக்கிரமே காலியாகிடும்.. நாம் செய்யும் தவறுகள் இதுதான்!

  பொதுவாக பேட்டரியின் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் அல்லது 500 முதல் 1000 சார்ஜிங் சுழற்சிகள் வரை இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு பல போன்களின் பேட்டரிகள் 3 ஆண்டிற்குள் கெட்டுவிடுகிறது. இதை சரிசெய்வதற்கும், உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 36

  செல்போன் சார்ஜ்.. இப்படி செஞ்சா போன் சீக்கிரமே காலியாகிடும்.. நாம் செய்யும் தவறுகள் இதுதான்!

  தொலைபேசியை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும்? : பெரும்பாலான நேரங்களில் உங்களது பேட்டரியை 30% முதல் 90% வரை சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். உங்களது மொபைல் போன் 20 சதவீதம் எட்டியவுடன் நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டும். அதற்கு மாறாக நீ்ங்கள் முழுவதுமாக சார்ஜ் டிரை ஆன பிறகு சார்ஜ் செய்யும் போது உங்களது லித்தியன்- அயன் பேட்டரியை வேகமாக பாதிக்கும். எனவே உங்களது போனை முழுவதுமாக ரீசார்ஜ் செய்வது ஃபோன் பேட்டரிக்கு ஆபத்தானது அல்ல. அதே சமயம் நீங்கள் ஒவ்வொரு முறையும் சார்ஜ் செய்யும் போது அதன் ஆயுட் காலம் குறையும். எனவே நீங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்யும் போது பேட்டரி சதவீதத்தைக் கணக்காணிப்பது நல்லது. உங்களது போன் பேட்டரி 20 சதவீதத்திற்குக் கீழே வருவதைத் தவிர்க்கவும்.

  MORE
  GALLERIES

 • 46

  செல்போன் சார்ஜ்.. இப்படி செஞ்சா போன் சீக்கிரமே காலியாகிடும்.. நாம் செய்யும் தவறுகள் இதுதான்!

  தொலைபேசியின் பேட்டரியை 100% சார்ஜ் செய்ய வேண்டுமா? : ஒவ்வொரு முறையும் உங்களது பேட்டரியை நீங்கள் 100 சதவீதம் சார்ஜ் செய்ய வேண்டியது இல்லை. சிலர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீத பேட்டரி ரீசார்ஜ் செய்ய பரிந்துரைக்கிறார்கள். இது நீண்ட கால பேட்டரி ஆயுளை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவியாக உள்ளது. மேலும் நீங்கள் முழு ரீசார்ஜ் செய்வதை விட அடிக்கடி , சிறிய சார்ஜ்கள் செய்வது சிறந்தது. குறிப்பாக உங்கள் iPhone முழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் நேரத்தைக் குறைப்பதன் மூலம் அதன் ஆயுட்காலத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேப் போன்று ஒவ்வொரு போனுக்கும் ஒவ்வொரு விதமாக வடிவமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் லித்தியம் பேட்டரியை எவ்வளவு ஆழமாக வெளியேற்றுகிறீர்களோ? அவ்வளவு அழுத்தமானது பேட்டரிக்கு ஏற்படுகிறது. எனவே, அடிக்கடி டாப் அப் செய்வது பேட்டரி ஆயுளை நீட்டிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 56

  செல்போன் சார்ஜ்.. இப்படி செஞ்சா போன் சீக்கிரமே காலியாகிடும்.. நாம் செய்யும் தவறுகள் இதுதான்!

  வேகமாக சார்ஜ் செய்வது தொலைபேசியை சேதப்படுத்துமா ? : வேகமாக சார்ஜ் செய்வது உங்கள் ஃபோனின் பேட்டரியை பாதிக்காத வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உருவாக்கப்படும் வெப்பம் அதன் ஆயுட்காலத்தை பாதிக்கும். எனவே வேகமாக சார்ஜ் செய்வதன் நன்மைகளை சமன் செய்து கொள்ளலாம். இதோடு உங்களது ஃபோன் பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரும்பாததைப் போலவே, அவை குளிரையும் விரும்புவதில்லை. எனவே, உங்கள் தொலைபேசியை சூடான காரில், கடற்கரையில், அடுப்புக்கு அடுத்ததாக, பனியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக, பேட்டரிகள் 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை அதிகப்பட்சமாக செயல்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  செல்போன் சார்ஜ்.. இப்படி செஞ்சா போன் சீக்கிரமே காலியாகிடும்.. நாம் செய்யும் தவறுகள் இதுதான்!

  மேலும் உங்களது மொபைல் போன் வேகமாக சார்ஜ் ஏற வேண்டும் என்றால் ப்ளைட் மோட் பயன்படுத்தவும். மேலும் உங்களது மொபைல் போனின் டேட்டாவைத் தானாக ஆப் செய்வதன் மூலம் பேட்டரியையும் சேமிக்கலாம். மேலும் நீங்கள் வேகமாக சார்ஜ் செய்வதற்கான மற்றொரு வழி, குறைந்த பவர் பயன்முறையில் இருக்கும்போது உங்கள் ஃபோனை சார்ஜ் செய்வது. இதோடு உங்களது மொபைல் பேட்டரியைப் பாதுகாக்க வைக்க வேண்டும் என்றால், மலிவான சார்ஜர்கள் மற்றும் கேபிள்களைத் தவிர்க்கவும்.இதுபோன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளும் போது உங்களது மொபைல் போன் பேட்டரி பல நாள்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

  MORE
  GALLERIES