முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » சமாளிக்க முடியாத வோடபோன்.. ஏர்டெல், ஜியோ மீது குற்றச்சாட்டு.. பஞ்சாயத்தைக் கூட்டும் 5ஜி!

சமாளிக்க முடியாத வோடபோன்.. ஏர்டெல், ஜியோ மீது குற்றச்சாட்டு.. பஞ்சாயத்தைக் கூட்டும் 5ஜி!

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பெரும்பாலான தங்கள் பிளான்களுடன் இலவச அழைப்பு விடுக்கும் வசதியை வழங்குகின்றன.

 • 17

  சமாளிக்க முடியாத வோடபோன்.. ஏர்டெல், ஜியோ மீது குற்றச்சாட்டு.. பஞ்சாயத்தைக் கூட்டும் 5ஜி!

  ஏர்டெல் மற்றும் ஜியோவில் அன்லிமிடெட் இலவச 5G சேவை வழங்குவது குறித்து அதிருப்தி தெரிவித்து அரசாங்கத்தில் வோடஃபோன் முறையிட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் அநியாயமாக உள்ளது என்று சாட்டி TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்)-க்கு வோடஃபோன் கடிதம் எழுதியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  சமாளிக்க முடியாத வோடபோன்.. ஏர்டெல், ஜியோ மீது குற்றச்சாட்டு.. பஞ்சாயத்தைக் கூட்டும் 5ஜி!

  இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், TRAI-க்கு (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) முறையாக தங்கள் பதில்களை வழங்கியுள்ளன. இந்தியாவில் 5G சேவைகள் இந்த மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அக்டோபர், 2022-இல் தொடங்கப்பட்டது. ஆனால், ஜியோ மற்றும் ஏர்டெல் பல மாநிலங்களில் 5G இணைய வேகத்தை வழங்குவது போல Vi ஆல் வழங்க இயலவில்லை. Vi குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே 5G இணைய வேகத்தை வழங்கியது.

  MORE
  GALLERIES

 • 37

  சமாளிக்க முடியாத வோடபோன்.. ஏர்டெல், ஜியோ மீது குற்றச்சாட்டு.. பஞ்சாயத்தைக் கூட்டும் 5ஜி!

  தற்போது எழுந்துள்ள புகார் தொடர்பாக, ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களின் 5G சேவைகளை இலவசமாக வழங்கவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்து தான் அதனைப் பெற வேண்டும் என்று விளக்கமளித்தது.

  MORE
  GALLERIES

 • 47

  சமாளிக்க முடியாத வோடபோன்.. ஏர்டெல், ஜியோ மீது குற்றச்சாட்டு.. பஞ்சாயத்தைக் கூட்டும் 5ஜி!

  இது குறித்து TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்), "நாங்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, அந்த இரண்டு நிறுவனங்களும், தங்கள் பதில்களை வழங்கியுள்ளன. எங்களது தரப்பில் எங்கள் சட்டக் குழு, நிதிக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழு ஆகியவை இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்," என்று கூறியது.

  MORE
  GALLERIES

 • 57

  சமாளிக்க முடியாத வோடபோன்.. ஏர்டெல், ஜியோ மீது குற்றச்சாட்டு.. பஞ்சாயத்தைக் கூட்டும் 5ஜி!

  இது போன்ற புகார்கள் எழுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. 2016 ஆம் ஆண்டில் ஜியோ தன்னுடைய சேவைகளை அறிமுகப்படுத்திய போதும் கூட ஏர்டெல் மற்றும் வோடஃபோன் புகார் எழுப்பியது. முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனத்தின் விலை நிர்ணயம் கொள்ளை அடிக்கும் விதத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியது. ஆனால், கடைசியில், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஜியோவுக்கு ஏற்றவாறு தங்கள் பிளான்களை மாற்றி அமைத்தனர்.

  MORE
  GALLERIES

 • 67

  சமாளிக்க முடியாத வோடபோன்.. ஏர்டெல், ஜியோ மீது குற்றச்சாட்டு.. பஞ்சாயத்தைக் கூட்டும் 5ஜி!

  தற்போது, ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பெரும்பாலான தங்கள் பிளான்களுடன் இலவச அழைப்பு விடுக்கும் வசதியை வழங்குகின்றன. அது மட்டும் அல்ல, இவற்றின் பல ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிளான்களில் இப்போது OTTக்கான சந்தாக்களும் வழங்கப்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 77

  சமாளிக்க முடியாத வோடபோன்.. ஏர்டெல், ஜியோ மீது குற்றச்சாட்டு.. பஞ்சாயத்தைக் கூட்டும் 5ஜி!

  தற்போது அனைவரும் IPL போட்டிகளை தங்கள் OTT தளங்களில் இருந்து காணும் வகையில், ஜியோ சினிமா வழிவகை செய்திருக்கும் பட்சத்தில், இந்தத் தளத்தின் நியாயமற்ற விலை நிர்ணயம் குறித்தும் ஏர்டெல் புகார் எழுப்பியது. ஆனால், இந்தப் புகாரையும் முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் தாங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணங்களையே வழங்குவதாகக் கூறி நிராகரித்தது.

  MORE
  GALLERIES