இந்தியாவில் VIVO X90 மற்றும் X90 ப்ரோ மொபைலின் விலைகள் : Vivo X90 மொபைலின் பேஸ் மாடலான 8GB + 256GB வேரியன்ட் ரூ.59,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் 12GB+256GB வேரியன்ட்டின் விலை ரூ.63,999-ஆக உள்ளது. Vivo X90 Pro மொபைலானது 12GB + 256GB என்ற சிங்கிள் வேரியன்ட்டில் வருகிறது, இதன் விலை இந்தியாவில் ரூ.84,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல்களை வாங்கும் யூஸர்களுக்கு 10% கேஷ்பேக் சலுகையை அளிக்க SBI, ICICI, HDFC மற்றும் IDFC போன்ற வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது தவிர ஏற்கனவே Vivo போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் X90 அல்லது X90 Pro வாங்கும் போது ரூ.8,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸை பெறலாம்.
VIVO X90 மற்றும் X90 PRO மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ் : இந்த சீரிஸில் இடம்பெற்றுள்ள 2 மொபைல்களும் அதிநவீன வடிவமைப்பு, ஈர்க்கக்கூடிய கேமரா அம்சங்கள் மற்றும் நம்பகமான செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இரண்டு ஃபோன்களும் 6.78-இன்ச் 3D கர்வ்ட் டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த ஃபோன்கள் MediaTek Dimensity 9200 SoC ப்ராசஸரை கொண்டுள்ளன.
X90 Pro மொபைலில் 1-இன்ச் Sony IMX 989 சென்சார் கொண்ட பிரைமரி 50MP கேமரா உள்ளது, இதை ஏற்கனவே Xiaomi 13 Pro-ல் நாம் பார்த்துள்ளோம். Vivo X90 சீரிஸ் யூஸர்களின் புகைப்படம் மற்றும் வீடியோகிராஃபி அனுபவத்தை மேம்படுத்த பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டு வருகிறது. இதற்கேற்ப இந்த மொபைலின் கேமரா அம்சங்கள் Vivo-வின் நீண்டகால கூட்டாளியான ZEISS உடன் இணைந்து உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
X90 சீரிஸ் ஃபோன்கள் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் பெரிய திறன் கொண்ட பேட்டரியுடன் வருகின்றன. X90 ப்ரோ மொபைலுக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த 2 மொபைல்களும் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான Funtouch OS வெர்ஷனில் இயங்குகின்றன. இந்த சீரிஸ் மொபைல்களின் டூயல்-ஃபிளாக்ஷிப் சிப்செட் மற்றும் பெரிய பேட்டரிகள் மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் ஆகியவை யூஸர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன. தவிர Vivo நிறுவனம் இந்தியாவில் உள்ள யூஸர்களுக்கு X90 சீரிஸில் சர்வதேச உத்தரவாதத்தை வழங்குகிறது.