Vivo-வின் v27 மற்றும் iQoo-வின் Neo7 உள்ளிட்ட இரண்டுமே புதிய ப்ரீமியம் ஸ்மார்ட் போன்கள் ஆகும். Vivo V27 மற்றும் iQoo Neo7 ஆகிய 2 ஸ்மார்ட் ஃபோன்களையும் இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம். V27 சீரிஸின் விலை ரூ.32,999 முதல் துவங்குகிறது. Vivo V27 மற்றும் iQoo Neo 7 மொபைல்களை ஒப்பிடும் போது இந்த 2 ஃபோன்களும் HDR10+ & 6.78-இன்ச் ஃபுல் HD AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வருகின்றன.
இருப்பினும் iQoo Neo 7 மொபைலானது v27-ஐ விட சற்று சிறந்த டச் சேம்ப்ளிங் ரேட், கலர் ரேஞ்ச் மற்றும் பிக்சல்வொர்க்ஸ் இன்டிபென்டன்ட் டிஸ்ப்ளே சிப் ப்ரோ+ உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இதற்கிடையே Vivo V27 மொபைலின் MediaTek Dimensity 7200 ப்ராசஸர் கொண்ட Mali-G610 MC4 GPU-யுடன் ஒப்பிடும்போது Neo 7 மொபைலானது Mali-G710 MC10 GPU-யுடன் வேகமான MediaTek Dimensity 9000+ ப்ராசஸரை கொண்டுள்ளது.
மேலும் iQoo Neo 7 அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. Vivo V27-ன் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் 128GB/256GB (UFS 3.1) அல்லது 256GB (UFS 3.1) ஆகும். Neo 7 மொபைலின் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 128GB அல்லது 256GB அல்லது 512GB (UFS 3.1) ஆகும். 2 ஸ்மார்ட் போன்களும் Android 13-ல் இயங்குகின்றன மற்றும் Funtouch OS 13 உடன் வருகின்றன. அதே போல iQoo-வின் Neo 7 மொபைலானது இன்ஃப்ராரெட் சென்சார் மற்றும் NFC கேப்பப்லிட்டிஸ்களை கொண்டுள்ளது. ஆனால் Vivo V27-ல் இது இல்லை. V27 மொபைலானது 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளிட்டவற்றை கொண்ட ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
அதே நேரம் iQoo-வின் Neo 7 மொபைலானது 50MP பிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. ஆனால் இதில் மேக்ரோ கேமராவிற்கு பதில் 2MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. V27 மொபைலில் செல்ஃபிக்காக 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், Neo 7 மொபைலில் 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த 2 ஃபோன்களுக்கு இடையே உள்ள பிற குறிப்பிடத்தக்க வேறுபாடுகளாக பேட்டரி கெப்பாசிட்டி மற்றும் சார்ஜிங் ஸ்பீட் உள்ளிட்டவை அடங்கும். Neo 7 மொபைலானது 5000mAh பேட்டரி மற்றும் வேகமான 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. அதே நேரம் Vivo V27 மொபைலானது 66W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4600mAh பேட்டரியை கொண்டுள்ளது.