முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் படம் ஆன்லைனில் வெளிவந்தது. இது பலருக்கும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் கூகுள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை தயாரிக்கும் சோதனை கட்டத்தில் உள்ளது என்று கூறலாம்.

 • 17

  விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

  கூகுள் நிறுவனத்தின் எல்லா வகையான புராடக்ட்களும் மிகவும் தரம் வாய்ந்தவையாக இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதே போன்று, தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புது புது சிறந்த தரமான புராடக்ட்களை கூகுள் நிறுவனமும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தனது முதல் மடிக்கக்கூடிய பிக்சல் போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 27

  விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

  இருப்பினும், கூகுள் பிக்சல் ஃபோல்ட் பற்றிய அதிகார பூர்வ தகவலை கூகுள் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், ஒரு புதிய புராடக்டை வெளியிட உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், அதன் வெளியீட்டு தேதி மற்றும் வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
  எனவே, ஆதாரங்களின்படி கூகிள் இரண்டு புதிய சாதனங்களை ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 37

  விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

  வரவிருக்கும் இரண்டு சாதனங்களில் ஒன்று கூகுள் பிக்சல் ஃபோல்டு (Google Pixel Fold) ஸ்மார்ட்போன், மற்றொன்று மலிவு விலையில் கிடைக்க கூடிய கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் ஆகும். கூகுள் பிக்சல் 8 மற்றும் அதன் ப்ரோ வெர்ஷன் இன்னும் சில காலங்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.சமீபத்தில், கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் படம் ஆன்லைனில் வெளிவந்தது. இது பலருக்கும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

  இந்த செய்தி உண்மையாக இருந்தால் கூகுள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை தயாரிக்கும் சோதனை கட்டத்தில் உள்ளது என்று கூறலாம். எனவே, இந்த ஃபோல்டு ஸ்மார்ட்போன் உண்மையில் ஜூன் மாதத்தில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், ஜூன் மாத தொடக்கத்தில் ஜெர்மனியில் இந்த ஃபோல்டு ஸ்மார்ட்போன் இரு வேறு வண்ணங்களில் வெளியாக கூடும் என்றும் கூறப்படுகின்றது. குறிப்பாக கார்பன் மற்றும் பீங்கான் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் என்று மற்றொரு அறிக்கை தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

  கூகுள் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 256ஜிபி வெர்ஷனில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை €1,700 ($1,825) ஆகும். இதுசாம்சங் ஃபோல்டு 4 போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று பலரும் தெரிவித்துள்ளனர். இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை €1,799 ($1,931) ஆகும். இருப்பினும், இது €1,599 ($1,716) விலையில் கிடைக்க கூடிய ஹானர் மேஜிக் Vs-ஐ விட விலை அதிகமானது.

  MORE
  GALLERIES

 • 67

  விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

  கூகுள் பிக்சல் 7a விலை  : ஃபோல்டிங்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போனைத் தவிர, கூகிள் நிறுவனம் விரைவில் கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இதன் 128GB ஸ்டோரேஜ் வெர்ஷன் €500 ($536) விலையில் கிடைக்கும் என்று வெளியிடப்பட்டுள்ளது. ஆர்க்டிக் ப்ளூ, கார்பன், காட்டன் மற்றும் ஜேட் ஆகிய நான்கு வண்ணங்களில் இது வரவுள்ளது. இந்த ஃபோன் சாம்சங்கின் மிட் ரேஞ்ச் கேலக்ஸி ஏ சீரிஸ் மற்றும் பிற பிராண்டுகளின் மிட் ரேஞ்ஜ் மொபைல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

  சிறப்பம்சங்கள் : பிக்சல் 7a ஸ்மார்ட்போன் பற்றிய சமீபத்திய தகவலின் படி, இது 6.1 இன்ச் 1080p திரையுடன் வரக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், OLED பேனலைப் பயன்படுத்தும் என்றும் 90Hz ரெபிரஷ் ரேட்டுடன் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் Tensor G2 அல்லது Exynos G5300 சிப்செட் பயன்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் வெளிவரவில்லை. UFS 3.1 நேட்டிவ், சோனி IMX787 64MP கேமரா சென்சார், 12MP அல்ட்ராவைடு சென்சார், 5W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பல சிறப்பம்சங்கள் இதில் வரவுள்ளது.

  MORE
  GALLERIES