புளூஸ்கைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் யார் இந்த ஜாக் டோர்ஸி என்பதை முதலில் பார்க்கலாம்… இந்த ஜாக் டோர்ஸி வேறு யாருமில்லை.. இவர் தான் டிவிட்டர் என்ற சமூக வலைப்பக்கத்தை உருவாக்கியவர். இப்போது டிவிட்டர் எலன் மஸ்க் கைகளில் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறது. இதனால் டிவிட்டரில் இருந்து வெளியேறும் அளவிற்கு பலரும் எரிச்சல் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் ஜாக் டோர்ஸி புளூஸ்கை என்ற புதிய சமூக வலைப்பக்கத்தை உருவாக்கி, அதை பரீட்சார்த்த முறையில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதென்ன புளூஸ்கை…. அதன் தொழில்நுட்ப விபரங்களை இப்போது பார்க்கலாம். கடந்தசெவ்வாயன்று, புளூஸ்கை அதன் பீட்டா சோதனையை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், புளூஸ்கை ஒரு "பரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னல்" என்று உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் புளூஸ்கை செயலியை அணுக விரும்பினால், நீங்கள் இணையதளம் வழியாகக் காத்திருப்போர் பட்டியலில் முதலில் சேர வேண்டும். பின்னர், ஆப்ஸின் பீட்டா பதிப்பு ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய நீங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
இப்போதைக்கு இது ஒரு இன்வைட் ஒன்லி அம்சமாகும். இன்னும் சிறிய காலத்திற்குப் பிறகு அனைவரின் பொது பயன்பாட்டிற்குக் கிடைக்கும். புளூஸ்ஸை எத்தகையது? இது எப்படி செயல்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். இது டிவிட்டரைப் போன்றது தான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளது. அதிபட்சமாக 256 எழுத்துகள் கொண்ட செய்தியை நம்மால் பகிர முடியும். அதோடு, படங்களைச் சேர்ப்பதற்கான வழிமுறையும் இதில் இருக்கிறது. டிவிட்டரைப் போலவே, "போஸ்டஸ் மற்றும் ரிப்ளை" ஆப்சன்களைக் கொண்டுள்ளது புளூஸ்கை.
கால வரிசை அடிப்படையில் புதிய செய்திகளை பயனர்களால் பார்க்க முடியும். கொஞ்சம் டிவிட்டரைப் போலவே தோன்றினாலும், சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. விரைவில் இது டிவிட்டருக்கு போட்டியான தளமாக மாறப்போகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எப்படி உறுதியாகச் சொல்கிறோம் என்றால் புளூஸ்கை செயலியை பயன்படுத்த பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக டேட்டா ஏஐ என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையை இங்கே குறிப்பிடலாம்.
அதாவது, ஆப்பிள் ஸ்டோரில் புளூஸ்கை லாஞ்ச் செய்யப்பட்ட பிப்ரவரி 17 ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 2ஆயிரம் முறை இந்த செயலி தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்த புளூஸ்கையில் என்னதான் இருக்கிது என்பதை தெரிந்து கொள்வதற்கான ஆர்வமா? இல்லை… எலன் மஸ்க் படுத்தும் பாட்டால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட எரிச்சலா? என்பது தெரியவில்லை..