முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ஊழியர்கள் பணிநீக்கம் முதல் இன்ஸ்டாவின் புதிய அம்சம் வரை - தொழில்நுட்ப உலகின் முக்கிய மாற்றங்கள்

ஊழியர்கள் பணிநீக்கம் முதல் இன்ஸ்டாவின் புதிய அம்சம் வரை - தொழில்நுட்ப உலகின் முக்கிய மாற்றங்கள்

இந்த வாரத்தில் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் தொழில்துறை வேலையிழப்பு பற்றிப் பார்ப்போம்.

  • 17

    ஊழியர்கள் பணிநீக்கம் முதல் இன்ஸ்டாவின் புதிய அம்சம் வரை - தொழில்நுட்ப உலகின் முக்கிய மாற்றங்கள்

    டெக்னாலாஜி உலகின் நவீன வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் அதி விரைவாக இருந்து நம்மை பிரமிக்க வைக்கின்றன. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தொழில்நுட்ப உலகின் சமீபத்திய முக்கிய செய்திகளை இங்கே பார்க்கலாம். சமீபத்திய வார டெக்னலாஜி செய்திகளில் 2027-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு இரண்டாவது ஐபோனும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்பதில் துவங்கி பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் சமீபத்திய தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் நிறுவனம் மாறியது உட்பட பல செய்திகள் குறித்து பார்க்க இருக்கிறோம்.

    MORE
    GALLERIES

  • 27

    ஊழியர்கள் பணிநீக்கம் முதல் இன்ஸ்டாவின் புதிய அம்சம் வரை - தொழில்நுட்ப உலகின் முக்கிய மாற்றங்கள்

    தைவானின் DigiTimes செய்தித்தாள் ஆய்வுப் பிரிவின் ஆய்வாளரான லூக் லின், சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகில் உற்பத்தியாகும் இரண்டு ஐபோன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 25% ஆப்பிள் ஐபோன்களை இந்தியா அசெம்பிள் செய்யும் என்ற JPMorgan-ன் கணிப்பை விட இந்த கணிப்பு மிகவும் தீவிரமானதாக பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    ஊழியர்கள் பணிநீக்கம் முதல் இன்ஸ்டாவின் புதிய அம்சம் வரை - தொழில்நுட்ப உலகின் முக்கிய மாற்றங்கள்

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோன்களுக்காக 200MP கேமரா சென்சார் ஒன்றை வெளியிட்டது. இந்த ISOCELL HP2 சென்சார், 200-மில்லியன் 0.6-மைக்ரோமீட்டர் (μm) பிக்சல்களை 1/1.3” ஆப்டிகல் ஃபார்மெட்டில் கொண்டுள்ளது. இது 108MP பிரதான ஸ்மார்ட்போன் கேமராக்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சென்சார் அளவாகும். இது நுகர்வோர் தங்கள் சமீபத்திய உயர்நிலை ஸ்மார்ட் போன் டிவைஸ்களில் பெரிய கேமரா பம்ப்ஸ் இல்லாமல் ஹை-ரெசல்யூஷன் கேப்ச்சருக்கு உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    ஊழியர்கள் பணிநீக்கம் முதல் இன்ஸ்டாவின் புதிய அம்சம் வரை - தொழில்நுட்ப உலகின் முக்கிய மாற்றங்கள்

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஆப்பிள் M2 Pro மற்றும் M2 Max ஆகிய 2 புதிய சக்திவாய்ந்த கஸ்டம் சிப்ஸ்-களை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. ஆப்பிள் நிறுவனம் இந்த இரு புதிய chips-களை உள்ளடக்கிய மேக் மினி மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்கள் உட்பட புதிய மேக்ஸை வெளியிட்டது. இந்த புதிய மாடல்களில் 14 இன்ச் மேக்புக் ப்ரோ (2023), 16 இன்ச் மேக்புக் ப்ரோ (2023) மற்றும் மேக் மினி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளிட்டவை அடங்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    ஊழியர்கள் பணிநீக்கம் முதல் இன்ஸ்டாவின் புதிய அம்சம் வரை - தொழில்நுட்ப உலகின் முக்கிய மாற்றங்கள்

    ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் ஹோம் மார்க்கெட்டில் கவனம் செலுத்துகிறது மற்றும் பல புதிய தயாரிப்புகளை உருவாக்குவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய டிஸ்ப்ளேக்கள், செட்-டாப் பாக்ஸ்கள் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இதில் அடங்கும். இந்த வரிசை புதிய டேப்லெட்-கிளாஸ் ப்ராடக்ட்டுடன் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு லோ-என்ட் iPad போல இருக்கும், இது தெர்மோஸ்டாட்கள், லைட்ஸ் அல்லது பிற இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) அக்சஸரிஸ் போன்ற டிவைஸ்களை கட்டுப்படுத்தும் ஒரு ஸ்மார்ட் ஹப் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 67

    ஊழியர்கள் பணிநீக்கம் முதல் இன்ஸ்டாவின் புதிய அம்சம் வரை - தொழில்நுட்ப உலகின் முக்கிய மாற்றங்கள்

    கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஜனவரி 20 அன்று சுமார் 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தது. இந்த விகிதம் அதன் பணியாளர்களில் 6%-ற்கும் அதிகமாகும். இது குறித்து ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பி இருக்கும் சுந்தர் பிச்சை, பணிநீக்க நடவடிக்கைகள் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினார். இந்த நடவடிக்கையால் பல செயல்பாடுகள், லெவல்ஸ் மற்றும் பிராந்தியங்கள் உட்பட அமைப்பு முழுவதிலும் உள்ள டீம்ஸ்கள் பாதிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 77

    ஊழியர்கள் பணிநீக்கம் முதல் இன்ஸ்டாவின் புதிய அம்சம் வரை - தொழில்நுட்ப உலகின் முக்கிய மாற்றங்கள்

    சமீபத்தில் இன்ஸ்டா quiet mode என்ற புதிய அம்சத்தை வெளியிட்டது. தற்போது இந்த அம்சம் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள யூஸர்களுக்கு கிடைக்கிறது. இந்த புதிய அம்சம் யூஸர்கள் அவர்களின் நண்பர்கள் மற்றும் ஃபாலோயர்ஸ்களுடன் லிமிட்டாக இருக்க உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மோடை ஆன் செய்துவிட்டால் ஃபிரெண்ட்ஸ் & ஃபாலோயர்ஸ்களிடம் இருந்து வரும் அதிகப்படியான நோட்டிஃபிகேஷன்ஸ் ஹைட் செய்யப்பட்டு விடும். இதனால் கவனம் சிதறாமல் நம்மால் இருக்க முடியும். யூஸர்கள் இதை இயக்கிய பிறகு எந்த புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ்களையும் பெற மாட்டார்கள். இன்ஸ்டா பயன்பாட்டைக் குறைக்க உதவும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES