நாட்டில் 5ஜி சேவையை கொண்டு வர, டெலிகாம் நிறுவனங்களும் இந்திய அரசாங்கமும் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றன. கூடிய விரைவில் நாம் அனைவருமே 5ஜி-ஐ பயன்படுத்துவோம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் உங்கள் கையில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் இல்லை என்றால், ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை தேடுகிறீர்கள் என்றால்? கவலையை விடுங்கள்! நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஒன்றல்ல.. மொத்தம் ஒன்பது தரமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்களை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுளோம்..
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி : ரூ.15,999 முதல் வாங்க கிடைக்கும் இது 6.6 இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட், 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000Mah பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.