ரெட்மியின் சமீபத்திய பட்ஜெட் ரக போன்கள் இந்திய சந்தையில் நல்ல விரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த வரிசையில் ரெட்மி நோட் 7S-ம் உள்ளது. ரெட்மி நோட் 7S 3ஜிபி+ 32 ஜிபி மாடல் 8,999 ரூபாயும் 4ஜிபி + 64 ஜிபி மாடல் 9,999 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ரெட்மி நோட் 7S டூயல் கேமிரா, 4,000mAh பேட்டரி, க்வால்காம் ஸ்நாப்ட்ராகன் 660 ப்ராசஸர், 256 ஜிபி ஸ்டோரேஜ் வரையிலான அம்சங்கள் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.
ரியல்மி 5: 3ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் 9,999 ரூபாயும் 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் உடனான போன் 10,999 ரூபாயும் 4ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 11,999 ரூபாயும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூ மற்றும் பர்ப்பிள் ஆகிய இரு நிறங்களில் வெளியாக உள்ளது. 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ்3+ பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. 12+8+2+2 மெகாபிக்சல் கொண்ட நான்கு ரியர் கேமிராக்கள் உள்ளன. கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிராவும் உள்ளது.