முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ப்ரைவசி வேணுமா..? போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் செயலிகளை லாக் செய்ய செம்ம ஐடியா..

ப்ரைவசி வேணுமா..? போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் செயலிகளை லாக் செய்ய செம்ம ஐடியா..

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியமான ஒரு அங்கம் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தெரியாத ஒருவர் கூட இல்லை என்ற நிலை வந்து விட்டது. சிறு குழந்தைகள் கூட மிக எளிதாக ஸ்மார்ட்போனை இயக்க கற்றுக் கொண்டு விட்டனர்.

  • 16

    ப்ரைவசி வேணுமா..? போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் செயலிகளை லாக் செய்ய செம்ம ஐடியா..

    ஸ்மார்ட்போனில் பலவித நன்மைகள் இருந்தாலும் அதன் மூலம் சில பிரச்சனைகளும் நமக்கு உண்டாகின்றன என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக பலரும் தங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சில ரகசியமான கோப்புகள் ஆகியவற்றை தங்களது ஸ்மார்ட் போனில் சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது போன்ற சமயங்களில் யாரேனும் உங்கள் போனை எடுத்து அந்த தகவல்களை பார்த்து விடவோ அல்லது தவறாக பயன்படுத்தவோ வாய்ப்பு உண்டு. எனவே உங்களது புகைப்படங்கள் தனிப்பட்ட விவரங்கள் செய்திகள் ஆகியவற்றை எவ்வாறு லாக் செய்து பாதுகாப்பாக வைப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 26

    ப்ரைவசி வேணுமா..? போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் செயலிகளை லாக் செய்ய செம்ம ஐடியா..

    ஆண்ட்ராய்டு போனை லாக் செய்வது எப்படி? : ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் பலருக்கும், மூன்றாம் தரப்பு மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி போனில் லாக் செய்யும் வசதியானது எளிதாக கிடைக்கிறது. அதில் ஒரு குறிப்பிட்ட செய்தி தான் ஆப் லாக் செயலியாகும். முதலில் பிளே ஸ்டோரில் இருந்து இந்த ஆப் லாக் செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்தவுடன் சில அடிப்படை அனுமதிகளை அது கேட்கும். அவை அனைத்திற்கும் அனுமதி அளிக்கவும். பிறகு அதன் உள்ளே சென்று + என்று பட்டனை அழுத்தி நீங்க லாக் செய்ய விரும்பும் செயலிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். லாக் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் தேர்வு செய்து பின் மீண்டும் + என்று பட்டனை அழுத்த நீங்கள் தேர்வு செய்து அனைத்து செயலிகளும் லாக் செய்யப்படும்.

    MORE
    GALLERIES

  • 36

    ப்ரைவசி வேணுமா..? போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் செயலிகளை லாக் செய்ய செம்ம ஐடியா..

    ஆப் லாக் செயலியை மற்றவர் பயன்படுத்த முடியுமா? : கண்டிப்பாக முடியாது. வேண்டுமென்றால் இன்னும் பாதுகாப்பை அதிகரிக்க ஆப் லாக் செயலிக்கு உங்களது கைரேகையை நீங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்தலாம். அதற்காக செட்டிங்கிற்கு சென்று அங்கு பாஸ்வோர்ட் செட்டிங் சென்ற ஆப்ஷனை தேர்வு செய்து, யூஸ் ஃபிங்கர் பிரிண்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். ஃபேஸ் அன்லாக் போன்ற மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    ப்ரைவசி வேணுமா..? போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் செயலிகளை லாக் செய்ய செம்ம ஐடியா..

    ஆப் லாக்கை இலவசமாக பயன்படுத்தலாமா? : இதனை நீங்கள் இலவசமாகவே பயன்படுத்தலாம். மேலும் ஆப் லாக்கை நீங்கள் பயன்படுத்துவதற்கு எந்த விதமான விளம்பரங்களும் உங்களுக்கு காண்பிக்கப்படாது. அதே சமயத்தில் போனின் வேகத்தை சற்றும் குறைக்காமல் இது செயல்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    ப்ரைவசி வேணுமா..? போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் செயலிகளை லாக் செய்ய செம்ம ஐடியா..

    போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எவ்வாறு மறைத்து வைப்பது? : தற்போது வரும் போன்களில் இருக்கும் கேலரி செயலியிலேயே போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மறைத்து வைக்கும் வசதியானது அளிக்கப்படுகிறது. அதே சமயத்தில் அவற்றை கண்டறிய வேண்டும் எனில் சற்று நேரம் எடுத்து மிகவும் கூர்ந்து கவனித்து அவற்றை தேடி எடுக்க வேண்டும். இதுவே சாம்சங் யூஸர்களாக இருப்பின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தேர்வு செய்து, “மூவ் டு செகியூர்ட் ஃபோல்டர்” என்ற ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலம் அவற்றை பாதுகாப்பாக மறைத்து வைக்க முடியும். இவற்றைத் தவிர மூன்றாம் தரப்பு செயலிகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 66

    ப்ரைவசி வேணுமா..? போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் செயலிகளை லாக் செய்ய செம்ம ஐடியா..

    வாட்ஸ்அப் சாட்டை எவ்வாறு மறைத்து வைப்பது? : வாட்ஸ் அப் செயலியிலேயே தற்போது கைரேகை மூலம் லாக் செய்யும் வசதியானது அளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நீங்கள் மற்றவர்களுடன் பேசிய சாட்டை தற்காலிகமாக மறைத்து வைக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. யாருடைய சாட்டை மறைக்க விரும்புகிறீர்களோ அதன் மீது லாங் பிரஸ் செய்து, “ஆர்க்கிவ்” என்பதனை தேர்வு செய்யவும். அதற்கு முன்பு அவரது சாட்டை “மியூட்” செய்வது அவசியமானது. கைரேகை மூலம் லாக் செய்யும் வசதியை பயன்படுத்த வாட்ஸ் அப் செட்டிங் சென்று, “பிரைவசி” என்பதனை தேர்வு செய்து, ஸ்க்ரோல் டவுன் செய்து ஃபிங்கர் பிரிண்ட் என்பதனை தேர்வு செய்து ஆன் செய்து கொள்ளவும்.

    MORE
    GALLERIES