இந்தியாவில் டிக்-டாக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
2/ 5
பொழுதுப் போக்கிற்காகவும், மன அமைதிக்காகவும் டிக்-டாக் செயலி மூலம் பாடல் மற்றும் வசனங்கள் பேசி வீடியோ வெளியிடுவதை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி வருகின்றனர்.
3/ 5
இதனால், இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 34 நிமிடங்கள் டிக்-டாக் செயலியும், 44 நிமிடங்கள் முகநூலையும் இந்தியர்கள் பயன்படுத்தி வருவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
4/ 5
நடப்பாண்டு ஆக்ஸ்ட் மாதம் வரை டிக்-டாக் செயலி பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 1.12 விழுக்காடு உயர்ந்து 28 விழுக்காடாக உள்ளது. முகநூலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 75 விழுக்காட்டில் இருந்து 80 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
5/ 5
இதே போல, இன்ஸ்டாகிராம், டுவிட்டர், ஹலோ போன்ற செயலிகளையும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.