புது மொபைல் வாங்குவது என்பது புதுசாக ஒரு வீட்டிற்கு குடி போவதற்கு சமமாகும். பல நாட்களாக தேடி தேடி வாங்கிய புது மொபைலை அவ்வளவு சீக்கிரத்தில் நாம் எப்போதும் போல பயன்படுத்தி விட முடியாது. பொதுவாக புது மொபைல் வாங்கிய பிறகு அதில் சிலவற்றை நாம் அவசியம் செய்தாக வேண்டி இருக்கும். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
நோட்டிபிகேஷன் : புது மொபைலில் அவசியம் நாம் பார்க்க வேண்டிய விஷயம் இந்த நோட்டிபிகேஷன் வசதியை தான். எல்லா செயலிகளுக்கும் இந்த நோட்டிபிகேஷன் ஆன் செய்யப்பட்டிருக்கும். எனவே உங்களுக்கு தேவையான செயலிகளில் மட்டும் நோட்டிபிகேஷன் வரும்படி செய்வதற்கு, செட்டிங்ஸ்-க்கு சென்று அவற்றை மாற்றி அமைக்கலாம். இதற்கு Apps & Notifications என்கிற ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதும். மேலும் உங்களுக்கு தேவையான செயலிகளில் மட்டும் நோட்டிபிகேஷனை ஆன் செய்தும் கொள்ளலாம்.
ஸ்மார்ட் லாக்: உங்களின் மொபைலில் நீங்கள் பயன்படுத்த கூடிய பாஸ்வேர்ட் போன்ற பிரைவசி சார்ந்த விஷயங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள உங்களின் பிங்கர் பிரிண்ட்டை லாக் செய்வதற்கு பயன்படுத்துவீர்கள். மேலும் சில முக்கியமான தருணங்களில் மட்டும் ஸ்மார்ட் லாக் என்கிற வசதியை பயன்படுத்தி நேரடியாக ஸ்வைப் செய்து பயன்படுத்தலாம்.
டிபால்ட் செட்டிங்ஸ்: புதிதாக மொபைல் வாங்கினால் அதில் செயலிகளை திறக்கும் போது 'Open with' என்கிற ஆப்ஷன் தோன்றி எரிச்சலை தரும். எனவே எல்லா வித செயலிகளுக்கும் டிபால்ட்டாக ஒரு குறிப்பிட்ட செயலியை மட்டும் திறக்கும்படி நீங்கள் செய்யலாம். மேலும் இதை உங்கள் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.
அவசரகால உதவி எண்: எப்போது புது மொபைல் வாங்கினாலும் அதில் 'Emergency SOS' என்கிற அவசரகால உதவி எண்ணை இணைத்து விடுங்கள். விபத்து அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இந்த ஆப்ஷன் உங்கள் உயிரையே காப்பாற்ற உதவும். மேலும் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் எண்களையும் இதில் நீங்கள் முன்கூட்டியே பதிவு செய்து விடலாம்.