54 சீன ஆப்களுக்கு தடை : பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மேலும் 54 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. சீனாவைச் சேர்ந்த விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் Xriver, பியூட்டி கேமரா, ஸ்வீட் செல்பி HD, கேம்கார்ட் , onmyoji,ஆன்மியோஜி செஸ், ஆன்மியோஜி அரீனா, ஆப்லொஜி அரங்கம் உள்ளிட்ட 54 செயலிகளை தகவல் மற்றும் தொழில் நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் பிப்ரவரி 14 அன்று மத்திய அரசு தடை செய்தது.
மோர்கன் ஸ்டான்லி அறிக்கை: மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி, 2040ம் ஆண்டளவில் உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் 50 சதவீதத்தை சேட்டிலைட் பிராட்பேண்ட் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை 70 சதவீதம் வரையிலும் கூட உயரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைகளை தொடங்க ரிலையன்ஸ் ஜியோ உலகளாவிய செயற்கைக்கோள் வழங்குநரான SES உடன் இணைந்தது. பார்தி ஏர்டெல், ஒன்வெப் மற்றும் ஹியூஸ் ஆகியவையும் அடுத்தடுத்த முயற்சிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன.
5ஜி ஸ்மார்ட் போன் : ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான விவோ, 5-ஜி தொழில் நுட்பத்தைக் கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய Vivo T1 ஆனது ஸ்நாப்டிராகன் 695 எஸ்.ஓ.சி. பிராசஸர், 120Hz டிஸ்ப்ளே, பெரிய கூலிங் சிஸ்டம் மற்றும் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்ட விவோ டி 1 5-ஜி ஸ்மார்ட் போனின் விலை ரூ.15,990 ஆகும்.
சாம்சங் ஸ்மார்ட் போன் : சாம்சங் தனது S22 தொடருக்கான இந்திய விலையை வெளியிட்டது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்22 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய பேசிக் மாடல் ரூ.1,09,900க்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவே 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் ரூ. 1,18,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது பாண்டம் பிளாக், வைட், பர்கண்டி என 3 நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.