பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபலமான செயலிகளில் ஒன்றான டெலிகிராம், பல புதிய அம்சங்கள் குறித்து, அதன் பயனர்களுக்கு சமீபத்தில் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட்டில், சேட் ஃபோல்டர்கள் (chat folders) முழுவதையும் லிங்க் (link) மூலம் பகிரும் வசதி, தனிப்பட்ட சேட்களுக்கான (chat) தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய வால்பேப்பர்களை உருவாக்குதல், சேட்-இல் இணைய செயலிகளைப் பயன்படுத்துதல் மற்றும் இது போன்ற பல அம்சங்கள் குறித்து விவரித்து இருந்தது. டெலிகிராமின் இந்த அட்டகாசமான புதிய அம்சங்கள் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
முதலில் பகிர்ந்து கொள்ளக் கூடிய சேட் ஃபோல்டர்கள் (Shareable Chat Folders) என்றால் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். இந்த பகிர்ந்து கொள்ளக் கூடிய சேட் ஃபோல்டர்கள் (Shareable Chat Folders) அம்சம் மூலம், பயனர்கள் இப்போது லிங்கைப் பயன்படுத்தி சேட் ஃபோல்டர்களை நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் கொலாபரேட் செய்வது அல்லது ஒன்றாக இணைந்து செயல்படுவது மிகவும் சுலபமாக இருக்கும்.
பயனர்கள் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும், ஃபோல்டர் சேர்க்கப்பட்டு விடும், அதை வைத்து அதன் அனைத்து சேட்களிலும் உடனடியாக இணையலாம். இருப்பினும், டெலிகிராம் தங்கள் வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி, பொதுவான சேட்ஸ் அல்லது பயனர் நிர்வாக உரிமைகள் உள்ள சேட்ஸ் மட்டுமே பகிரப்பட்ட ஃபோல்டரில் சேர்க்கப்படும்.
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், குறிப்பிட்ட சேட்களுக்கு நீங்கள் தனிப்பயனாக்கப்பட்ட வால்பேப்பர்களை அமைத்துக் கொள்ளலாம். எந்தவொரு 1-ஆன்-1 சேட் (chat)-லும் நீங்கள் உங்களுக்குப் பிடித்த புகைப்படங்கள் அல்லது வண்ண வால்பேப்பர்களை அமைத்து உங்கள் உரையாடல்களைத் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.
கூடுதலாக, டெலிகிராம் அதன் சேட்களில் இணைய செயலிகளை ஒருங்கிணைத்துள்ளது, பயனர்கள் தங்கள் சேட்-இல் இணைய செயலிகளை தடையின்றி தொடங்க இது அனுமதிக்கிறது. இந்த இணைய செயலிகளை நாம் நேரடி லிங்க் மூலம் பயன்படுத்தலாம் அல்லது டெலிகிராமில் உள்ள ஏதேனும் சேட்-இல் போட்டின் பயனர் பெயரைக் குறிப்பிடலாம். டெலிகிராமின் இந்த புதிய அம்சங்கள் யாவும் பயனர்கள் இணைந்து செயல்பட உதவியாக இருக்கும்.