முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » அடி தூள்..! புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் டெலிகிராம்…!

அடி தூள்..! புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் டெலிகிராம்…!

வேகமாக வளர்ந்து வரும் டெலிகிராம் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், புதிய பயனர்களை சேர்க்கும் நோக்கத்திலும் புதிய தொழில்நுட்ப அப்டேட்கள் மற்றும் பயனீட்டு வசதிகளையும் அறிமுகம் செய்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • 16

    அடி தூள்..! புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் டெலிகிராம்…!

    சமூக வலைதள  செயலியான வாட்ஸ் அப் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் இன்னும் பல செயலிகளும் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்து வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் டெலிகிராம்.

    MORE
    GALLERIES

  • 26

    அடி தூள்..! புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் டெலிகிராம்…!

    வாட்ஸ்அப் செயலியைப் போன்றே டெலிகிராம் நிறுவனமும் அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது கூட டெலிகிராம் செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை எனனெ்ன அப்டேட்கள் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    அடி தூள்..! புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் டெலிகிராம்…!

    பவர் சேவிங் மோட் : மேலே குறிப்பிட்டது போல் பேட்டரி பிரச்சனையைச் சரி செய்ய பவர் சேவிங் மோட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது டெலிகிராம். ஏற்கெனவே ரெட்யூஸ் மோசன் செட்டிங் மூலம் Animations நிறுத்திக்கொள்ளும் வசதி இருந்தாலும், பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க இப்போது பவர் சேவிங் மோட்-ஐ அறிமுகம் செய்துள்ளது டெலிகிராம் நிறுவனம். இந்த பவர் சேவிங் ஆனது பேட்டரி ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்ததும் தானாகவே ON-ஆகிவிடும். பின்பு இதை நாம் பயன்படுத்த settings பகுதிக்குச் சென்று Power Saving Mode On செய்தால் போதும். இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 46

    அடி தூள்..! புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் டெலிகிராம்…!

    கிரானுலர் பிளே ஸ்பீட்(Granular Play Speed) வசதி  : டெலிகிராம் செயலியில் நாம் பார்க்கும் வீடியோ மற்றும் Podcast, ஆடியோ போன்றவற்றின் வேகத்தை குறைக்கவும் அதிகரிக்கவும் முடியும். அதற்கு தான் Granular Play Speed அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி பயனர்கள் நாம் பார்க்கும் வீடியோக்களின் வேகத்தை 0.2x வேகத்தில் தொடங்கி 2.5x வரை அதிகரிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    அடி தூள்..! புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் டெலிகிராம்…!

    டெலிகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மற்றொரு அப்டேட் Read Time அம்சம். இதன் மூலம் இனிமேல் டெலிகிராம் செயலியில் உள்ள ஒரு குழுவில் நாம் ஒரு மெசேஜ் பார்த்தால் அந்த மெசேஜ் எந்த நேரத்திற்கு பார்க்கப்பட்டது என்பது போன்ற விவரங்களை காணமுடியும்.

    MORE
    GALLERIES

  • 66

    அடி தூள்..! புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் டெலிகிராம்…!

    இதுதவிர டெலிகிராம் செயலியில் புதிதாக பல Animation மற்றும் Emoji, Auto-send Invite Links அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் ஐஒஎஸ் பயனர்கள் One Tap மூலம் அனைத்து Chat இணைப்புகளையும் Mark All செய்யலாம். இந்த புதிய அப்டேட்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். மேலும், பல டெக்னிகல் அப்டேட்கள் இன்னும் கொண்டுவரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES