இப்போது புரோ மாடல் என்னும் பெயரில் ஹையர் டெக்னாலஜி அம்சங்கள் நிறைந்த செல்போன்கள் விற்பனைக்கு வருகின்றன. ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் பணம் கொடுத்து அந்த போனை வாங்கவும் தயாராக இருக்கிறார்கள் செல்போன் பிரியர்கள். காரணம், கேமரா முதல் கேமிங் வரை இந்த புரோ போன்களில் இருக்கும் ஹைஃபை அம்சங்கள் தான். வழக்கமாக புரோ போன்களின் விலை ஐம்பதாயிரம் அறுபதாயிரம் இருக்கும் நிலையில் வெறும் பத்தாயிரத்திற்கும் பனிரெண்டாயிரத்திற்கும் புரோ போன்கள் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? நம்பச் சொல்கிறது டெக்னோ நிறுவனம்.
பட்ஜெட் விலையில் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்குமென்று கூறப்படுகிறது. வரவிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் விலை ரூ.10,000 முதல் ரூ.12,000-க்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் புரோ 10 போன் மார்ச்சின் மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை பத்தாயிரத்தில் இரந்து பன்ரெண்டாயிரத்திற்குள் இருக்கும் என்றும் தெரிகிறது.