சீன மொபைல் போன் உற்பத்தி பிராண்டான டெக்னோ மொபைல் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த ஸ்மார்ட் ஃபோன் Pop சீரிஸின் கீழ் வரும் என்ட்ரி-லெவல் பட்ஜெட் மொபைல் ஆகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Tecno Pop 7 Pro மொபைல் நல்ல கேமரா, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் பெரிய டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட் போனை வாங்க விரும்பும் யூஸர்களுக்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மொபைல் இன்-பாக்ஸ் 10W டைப் C சார்ஜருடன் வருகிறது மற்றும் இது ஒரு சக்திவாய்ந்த 5000mAh பேட்டரி பேக்கேஜை கொண்டுள்ளது. இந்த மொபைல் 29-நாள் ஸ்டாண்ட்பை டைம் மற்றும் 156 மணிநேரம் வரை மியூசிக் ப்ளேபேக் டைமையும் வழங்குவதாக Tecno நிறுவனம் உறுதியளிக்கிறது.
Tecno Pop 7 Pro- மொபைலின் விலை : இந்த புதிய மொபைல் 2GB+64GB மற்றும் 3GB+64GB என 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ.6,799 மற்றும் ரூ.7,299 ஆகும். மேலும் இந்த மொபைல் என்ட்லெஸ் பிளாக் மற்றும் யுயுனி ப்ளூ (Uyuni Blue) உள்ளிட்ட 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போன் வரும் பிப்ரவரி 22,2023 முதல் அமேசான் இ-காமர்ஸ் வெப்சைட்டில் வாங்க கிடைக்கும்.
Tecno Pop 7 Pro மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ் : இந்த மொபைல்90% ஸ்கிரீன் டு பாடி ரேஷியோவுடன் 6.56-இன்ச் HD+ டாட் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் 120Hz டச் சேம்ப்பிளிங் ரேட்டை கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 1612x720 ரெசல்யூஷனுடன் 480நிட்ஸ் பீக் பிரைட்னஸை வழங்குகிறது. இந்த டூயல் நானோ 4G சிம்-சப்போர்ட் டிவைஸ் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 11.0-ல் இயங்குகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டெக்னோ ஸ்மார்ட் போன் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Tecno Pop 7 Pro மொபைல் 256GB வரை விரிவாக்கக்கூடிய பிரத்யேக ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்த வரை இந்த ஸ்மார்ட் ஃபோனில் AI மோடஸ் சப்போர்ட்டுடன் 12 மெகாபிக்சல் பிரைமரி டூயல் ரியர் கேமரா உள்ளது. இதன் முன் பக்கம் 5 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் டூயல் மைக்ரோ ஸ்லிட் ஃப்ளாஷ்லைட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஃபோன் WiFi மற்றும் Bluetooth 5.0 கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்கிறது.