கோடை வெயில் மார்ச் மாதத்திலேயே கொளுத்தத் தொடங்கிவிட்டது. இன்னும் 2 மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென்றே தெரிகிறது. குறிப்பாக கத்திரி வெயில் நேரத்தில் நாட்களை ஓட்டுவதே பெரும் கஷ்டம். கிராமத்தில்கூட சமாளித்துவிடலாம். ஆனால் நெருக்கமான குடியிருப்புகளில் வசிக்கும் நகரத்து மக்கள் கதி கஷ்டம்தான்.