முகப்பு » புகைப்பட செய்தி » வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் மீண்டும் செயல்படத் தொடங்கின. இதனால், மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சுமார் 51,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • 18

    வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

    பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் திங்கட்கிழமை இரவு 9 மணி முதல் முடங்கியது. சுமார் 6 மணி நேரம் வரை நீடித்த இந்த முடக்கத்தால் உலகம் முழுவதும் இந்த செயலிகளை பயன்படுத்தி வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முதலில் இணையத்தில் பிரச்சனை இருப்பதாக கருதிய யூசர்கள், சில மணி நேரங்களுக்குப் பின்னரே பேஸ்புக், வாட்ஸ்அப் செயலிகள் முடங்கியதை உணர்ந்தனர்.

    MORE
    GALLERIES

  • 28

    வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

    இது குறித்து விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தங்களின் சேவைகளை முடங்கியிருப்பதாகவும், விரைவில் சரிசெய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தது. சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் மீண்டும் செயல்படத் தொடங்கின. இதனால், மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சுமார் 51,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 38

    வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மக்கள் இதுபோன்ற தொழில்நுட்ப பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் ஒரே செயலிகளை மட்டும் நம்பியிருக்காமல் அதற்கு மாற்றாக இருக்கும் சில செயலிகளையும் தெரிந்து கொண்டால், நம்முடைய கம்யூனிகேஷனுக்கு எந்தவித பாதிப்பும் வராது. உதாரணமாக, வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் அனைத்து அம்சங்களும், இன்னும் சில செயலிகளிலும் இருக்கின்றன. வாட்ஸ் அப்பில் பிரச்சனை என்றால், உடனடியாக இந்த செயலிகளை உபயோகப்படுத்தலாம். வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 48

    வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

    1. டெலிகிராம் (Telegram) : வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக பிரபலமாக இருக்கும் செயலி டெலிகிராம். வாட்ஸ்அப் செயலியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் அப்படியே டெலிகிராமிலும் உள்ளது. வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்து சாட்களையும் அப்படியே டெலிகிராம் செயலிக்கு மாற்றிக் கொள்ள முடியும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் செயலியைப் போல் இந்த செயலியும் இலவசமாக யூசர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 58

    வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

    2. சிக்னல் (Signal) : வாட்ஸ்அப் செயலியின் உருவாக்கத்தில் பங்காற்றிய, வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டனின் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலி இது. இந்த செயலியும் வாட்ஸ்அப் கொடுக்கும் என்ட் டூ என்ட் என்கிரிப்டேட் ஆப்சனை யூசர்களுக்கு கொடுக்கிறது. வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்து ஆப்சன்களும் இந்த செயலியிலும் உள்ளன. தற்போது சிக்னல் செயலி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

    3. ஐ மெசேஜஸ் (iMessages) : ஆப்பிள் ஐபோன் யூசர்களுக்கு சிறந்த செயலி ஐ மெசேஜ். ஆப்பிள் ஸ்மார்ட்போன் யூசர்கள், இந்த செயலியைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு இலவசமாக மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம். யூசர்களின் நம்பிக்கைக்கு உகந்த வகையில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

    4. டிஸ்கார்டு (Discord): தொழில்நுட்ப காரணங்களால் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் பிரச்சனைகளை சந்திக்கும்போது, உடனடியாக டிஸ்கார்டு செயலியை பயன்படுத்தலாம். குரூப் அல்லது தனிநபர்களுடன் சாட் செய்ய சிறந்த செயலி.

    MORE
    GALLERIES

  • 88

    வாட்ஸ்அப்-க்கு மாற்றாக இருக்கும் பெஸ்ட் 5 செயலிகள் - இதோ பட்டியல்!

    5. மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams): வீடியோ கான்பரன்சிங் சாப்ட்வேரான மைக்ரோசாப்ட் டீம்ஸ், நெருங்கியவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், நாம் நலமாக இருக்கிறோமா? என்பது குறித்த தகவல்களை உடனடியாக தெரியப்படுத்த உகந்தது. வாட்ஸ்அப் செயலி முடங்கினால், அந்தநேரத்தில் உடனடியாக இந்த செயலிகளை பயன்படுத்தி, நாம் சொல்ல வரும் தகவல்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தலாம்.

    MORE
    GALLERIES