இந்தியாவில் பிரபல சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மான ஸ்னாப்சாட்-ன் (Snapchat), மன்த்லி ஆக்ட்டிவ் யூஸர்களின் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டியுள்ளது. இவர்களில் 120 மில்லியன் பேர் பிளாட்ஃபார்மில் கன்டென்டை பார்க்கிறார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சமீபத்தில் Snapchat-ன் தாய் நிறுவனமான Snap Inc தெரிவித்துள்ளது.
தங்களின் இந்த நடவடிக்கை அனைத்தும் Snap 200 மில்லியன் ஆக்ட்டிவ் யூஸர்ஸ் என்ற இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைய உதவியிருப்பதாக Snap Inc நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆக்ட்டிவ் யூஸர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தியதை தவிர, Snapchat-க்காக My AI என பெயரிடப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட எக்ஸ்பிரிமென்டல் AI-பவர்ட் சாட்போட் அறிமுகத்தை பற்றியும் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
இது பிறந்தநாள் பரிசு யோசனைகளை பரிந்துரைக்கலாம், நீண்ட வார இறுதியில் ஒரு பயணத்தை திட்டமிட உதவலாம் அல்லது இரவு உணவிற்கான ரெசிபியை பரிந்துரைக்கலாம். பிரபலமான விஷுவல் மெசேஜிங் App-ஆக இருக்கும் Snapchat, உலகளவில் சுமார் 750 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர ஆக்ட்டிவ் யூஸர்களை கொண்டுள்ளது, இதில் 18-24 வயதுக்குட்பட்ட யூஸர்கள் சுமார் 90 சதவீதம் உள்ளனர்.
இதனிடையே Snap, APAC, தலைவர் அஜித் மோகன் பேசுகையில், நமது இந்திய யூஸர்கள் மத்தியில் அதிக ஆக்ட்டிவ் யூஸர்களை கொண்டுள்ளதில் மகிழ்ச்சியடைகிறோம். Snapchat-ல் கம்யூனிட்டிஸ் மற்றும் பிசினஸ்களை உருவாக்க பார்ட்னர்ஸ், கிரியேட்டர்ஸ் மற்றும் பிராண்டுகளுக்கு நம்பமுடியாத அளவு சாத்தியக்கூறுகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம் என்றார்.
இளம் இந்தியா குறிப்பாக ஆரோக்கியமான மற்றும் தனிப்பட்ட சூழலுக்கு மதிப்பளித்து வருகிறது, எனவே இதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்றார். தற்போதைய நிலவரப்படி Snapchat-ஐ பயன்படுத்தும் 120 மில்லியனுக்கும் அதிகமான இந்திய யூஸர்கள் ஸ்டோரிஸ், ஸ்பாட்லைட் (யூஸர் ஜெனரேட்டட் கன்டென்ட்) மற்றும் செயலியின் பார்ட்னர்ட் கன்டென்ட் மூலம் கன்டென்ட்ஸ்களை பார்க்கிறார்கள் என்று Snap தெரிவித்துள்ளது.
அதே போல் இந்தியாவில் உள்ள ஸ்னாப்சாட்டர்கள் ஒவ்வொரு மாதமும் 50 பில்லியனுக்கும் அதிகமான முறை ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) லென்ஸ்களை பயன்படுத்துகிறார்கள். தவிர 85%-ற்கும் அதிகமான ஸ்னாப்சாட் யூஸர்கள் இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்களை விஷுவலாக வெளிப்படுத்த லென்ஸ்களை பயன்படுத்துகின்றனர் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் Snapchat தொடர்ந்து வளர்ந்து வருவதால் இந்திய யூஸர்களுக்கு சிறப்பான் சேவையை வழங்க டீம்கள் உருவாக்கப்பட்டு பல பணிகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தி வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வீடியோ கன்டென்ட் பிரிவில் YouTube, Instagram, Share Chat, Moj மற்றும் பிறவற்றுடன் Snapchat போட்டியிடும் அதே நேரம் டிஜிட்டல் விளம்பரத்தில் து Google, Facebook, Twitter மற்றும் Share Chat ஆகியவற்றுடன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.