முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » முன்பதிவு தொடங்கிய ஒரு நாளில் ரூ.1,400 கோடி அள்ளிய சாம்சங்..! எதிர்பார்ப்பை அள்ளும் புது மாடல்..

முன்பதிவு தொடங்கிய ஒரு நாளில் ரூ.1,400 கோடி அள்ளிய சாம்சங்..! எதிர்பார்ப்பை அள்ளும் புது மாடல்..

சாம்சங் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒரு ஸ்மார்ட் போனுக்கான புக்கிங் தொடங்கிய முதல் நாளிலேயே 1.4 லட்சம் ஆர்டர்கள் குவிந்துள்ளன. இந்த போன் சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 16

    முன்பதிவு தொடங்கிய ஒரு நாளில் ரூ.1,400 கோடி அள்ளிய சாம்சங்..! எதிர்பார்ப்பை அள்ளும் புது மாடல்..

    தென்கொரியாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உலகளாவிய செல்போன் மார்க்கெட்டின் ஜாம்பவான் என்றே சொல்லாம். அந்த அளவு மிக வலுவான சந்தையை கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். அதன் ஒவ்வொரு வெளியீடும் விற்பனையில் சக்கை போடு போடுகிறது. முன்னர் அறிமுகமான கேலக்சி எஸ்22 மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் கேலக்சி எஸ்23 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    முன்பதிவு தொடங்கிய ஒரு நாளில் ரூ.1,400 கோடி அள்ளிய சாம்சங்..! எதிர்பார்ப்பை அள்ளும் புது மாடல்..

    கடந்த 2ஆம் தேதி நடந்த Galaxy Unpacked நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் அனைத்து வேரியண்ட்டுகளும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மூன்று மாடல்களிலும் கொரில்லா கிளாஸ் விக்டாஸ் 2 பாதுகாப்பு அம்சம் உள்ளது. முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வியட்நாமில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் புது வரவான கேலக்சி எஸ் 23 இந்தியாவில் உள்ள நொய்டா ஆலையில் தயாரிக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    முன்பதிவு தொடங்கிய ஒரு நாளில் ரூ.1,400 கோடி அள்ளிய சாம்சங்..! எதிர்பார்ப்பை அள்ளும் புது மாடல்..

    ஏனென்றால் புதுவரவான கேலக்சி எஸ்23 சீரீசின் சிறப்பம்சமே அதன் கேமராக்கள் தான். இந்த போன்களில் 12 முதல் 200 மெகாபிக்சல்கள் வரையிலான 5 கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது கேமரா லென்சுகளுக்கான இறக்குமதி வரி நீக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பால் எஸ்23 சீரீஸ் போன்களை இந்தியாவில் தயாரிக்கும் முடிவை எடுத்துள்ளது சாம்சங் நிறுவனம்.

    MORE
    GALLERIES

  • 46

    முன்பதிவு தொடங்கிய ஒரு நாளில் ரூ.1,400 கோடி அள்ளிய சாம்சங்..! எதிர்பார்ப்பை அள்ளும் புது மாடல்..

    பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக Samsung Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra போனை அறிமுகம் செய்துள்ளது. கேலக்சி எஸ் 23 சீரீசில் அடிப்படை மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை ரூ.79,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் கேலக்சி எஸ்23+ ல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.94,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 56

    முன்பதிவு தொடங்கிய ஒரு நாளில் ரூ.1,400 கோடி அள்ளிய சாம்சங்..! எதிர்பார்ப்பை அள்ளும் புது மாடல்..

    கேலக்சி S23 Ultra ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை ரூ.1,24,999 ஆகவும்,  12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,34,999 ஆகவும், 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,54,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
    கேலக்சி S23 சீரிஸின் ப்ரீமியம் வேரியண்ட்டாக கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா உள்ளது. இதன் கேமரா அம்சங்கள் மிகவும் அட்வான்சாக உள்ளது. 200 மெகாபிக்சல் திறனுடன் பிரைமரி வைட் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர், 10 எம்பி ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ லென்ஸ் என அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது எஸ்23 Ultra.

    MORE
    GALLERIES

  • 66

    முன்பதிவு தொடங்கிய ஒரு நாளில் ரூ.1,400 கோடி அள்ளிய சாம்சங்..! எதிர்பார்ப்பை அள்ளும் புது மாடல்..

    இந்த கேமராக்கள் மூலம் சக்திவாய்ந்த டிஜிட்டல் கேமராவுக்கு இணையான தரத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் உடன் எஸ் பென் சப்போர்ட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தனை சிறப்பம்சங்களுடன் இருப்பதால் அறிமுகம் செய்யப்பட்டு புக்கிங் அறிவிக்கப்பட்ட உடனேயே ஒரே நாளில் 1லட்சத்து 40 ஆயிரம் போன்களுக்கான ஆர்டர்கள் கிடைத்துளளது என்கிறார் சாம்சங் இந்தியா, மொபைல் வர்த்தகப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ராஜு புல்லன்.

    MORE
    GALLERIES