Samsung Galaxy M14 5G விலை, சலுகைகள், நிறம் மற்றும் பல :- அறிமுக சலுகையாக Galaxy M14 5G ஸ்மார்ட்போனின் 4+128GB வேரியண்ட் 13,490 ரூபாய்க்கும், 6+128GB வேரியண்ட் 14,990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. எனினும், இந்த சலுகை குறிப்பிட்ட சில வங்கி கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். Galaxy M14 5G ஸ்மார்ட்போனை நோ-காஸ்ட் இஎம்ஐ மூலமாகவும் வாடிக்கையாளர்கள் வாங்கி கொள்ளலாம்.
Samsung Galaxy M14 5G சிறப்பம்சங்கள் : இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படும் 6.6 இன்ச் ஃபுல் HD+ 90Hz டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 5nm Exynos 1330 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது மற்றும் RAM பிளஸ் அம்சத்துடன் கூடிய 12GB RAM வரையிலான ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 13 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனிற்கு OS-ன் இரண்டு ஜெனரேஷன்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது.
6,000 mAh பேட்டரியுடன் வரும் Samsung Galaxy M14 5G ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. 5G, 4G, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத், NFC, GPS, மற்றும் ஒரு USB டைப்-C போர்ட் ஆகிய கனக்டிவிட்டி அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் செக்யூர் ஃபோல்டர் மற்றும் வாய்ஸ் ஃபோக்கஸ் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனுடன் வருகிறது. பொருளாதாரம் சம்மந்தப்பட்ட அப்ளிகேஷன்கள், பெர்சனல் IDகள் மற்றும் பல இரகசியமான ஆவணங்களை ஸ்டோர் செய்ய சாம்சங் வாலட் கொடுக்கப்பட்டுள்ளது.
"Galaxy M14 5G ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இது 50 MP டிரிபிள் கேமரா, 5nm ப்ராசஸர், 6000mAh பேட்டரி மற்றும் 13 5G பேண்ட் ஆதரவு போன்ற சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. இது ஒரு சிறந்த 5G சாதனமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. ” என்று சாம்சங் இந்தியாவின் மொபைல் பிசினஸ் இயக்குனர் ராகுல் பஹ்வா கூறினார்.