முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ஜியோவின் அதிரடி ஆஃபர் : குடும்பத்திற்கு ஒரே ப்ளான்... ரூ.399 முதல்... - மிஸ் பண்ணிடாதீங்க!

ஜியோவின் அதிரடி ஆஃபர் : குடும்பத்திற்கு ஒரே ப்ளான்... ரூ.399 முதல்... - மிஸ் பண்ணிடாதீங்க!

Jio Plus Postpaid Plan : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் டெலிகாம் யூனிட்டான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பிளஸ் திட்டத்தின் கீழ் புதிய போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளான்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது ஒரு போஸ்ட்பெய்ட் பிளானுடன் இலவச நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சப்கிரிப்ஷன்ஸ்களையும் சேர்த்து வழங்குகிறது.

 • 17

  MORE
  GALLERIES

 • 27

  ஜியோவின் அதிரடி ஆஃபர் : குடும்பத்திற்கு ஒரே ப்ளான்... ரூ.399 முதல்... - மிஸ் பண்ணிடாதீங்க!

  ஜியோவின் இந்த புதிய ஃபேமிலி பிளான்ஸ்கள் ரூ.399 முதல் துவங்குகிறது. ஜியோ பிளஸ் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பிளான்கள் வரும் மார்ச் 22 முதல் யூஸர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த பிளான்களின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு இலவச சேவைகளைப் பெறலாம். நீங்கள் ஜியோ கஸ்டமர் என்றால் இந்த பிளானை முயற்சிக்க விரும்பினால் ஜியோ நிறுவனம் உங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு உறுப்பினர்களுக்கு 1 மாத இலவச சோதனை வசதியையும் வழங்குகிறது. அதாவது 4 பேர் கொண்ட குடும்பம் ஒரு மாதத்திற்கு இலவசமாக இந்த சர்விஸ்களை முயற்சிக்க ஜியோ அனுமதிக்கும்.

  MORE
  GALLERIES

 • 37

  ஜியோவின் அதிரடி ஆஃபர் : குடும்பத்திற்கு ஒரே ப்ளான்... ரூ.399 முதல்... - மிஸ் பண்ணிடாதீங்க!

  புதிதாக அறிமுகமாக உள்ள இந்த பிளான்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் பிற நன்மைகளும் அடங்கும். ஜியோ பிளஸ் பிளான் வரும் மார்ச் 22 முதல் அனைத்து ஜியோ ஸ்டோர்களிலும் மற்றும் ஹோம் டெலிவரி ஆப்ஷன் மூலமாகவும் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  ஜியோவின் அதிரடி ஆஃபர் : குடும்பத்திற்கு ஒரே ப்ளான்... ரூ.399 முதல்... - மிஸ் பண்ணிடாதீங்க!

  ஜியோ பிளஸ் போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளான்ஸ் : ரூ.399 ஜியோ போஸ்ட்பெய்ட் ஃபேமிலி பிளானில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் பெனிஃபிட்ஸ் , 75GB டேட்டா உள்ளிட்டவை அடங்கும். ரூ.699 என்ற விலையில் வழங்கப்படும் மற்றொரு ஜியோ பிளஸ் பிளானில் மாதத்திற்கு 100GB டேட்டா கிடைக்கும். இதிலும் நீங்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை பெறலாம். கூடுதலாக அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் சேவைகளும் இலவசமாகக் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 57

  ஜியோவின் அதிரடி ஆஃபர் : குடும்பத்திற்கு ஒரே ப்ளான்... ரூ.399 முதல்... - மிஸ் பண்ணிடாதீங்க!

  ரூ.399 பிளானின் கீழ் சோதனை முடிந்த பிறகு கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும் 3 ஆட்-ஆன் கனெக்ஷன்களின் கீழ் வரும் ஒவ்வொரு சிம்மிற்குகும் தலா ரூ.99 செலுத்த வேண்டும். அதாவது 4 போஸ்ட்பெய்ட் கனெக்ஷன்களுக்கான மொத்த மாதாந்திரக் கட்டணம் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூ.696 ஆக இருக்கும். அதே போல ரூ.699 பிளானை தேர்வு செய்பவர்கள் மூன்று கூடுதல் சிம்முடன் சேர்ந்து மாதத்திற்கு ரூ.996 செலுத்தும்படி இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  ஜியோவின் அதிரடி ஆஃபர் : குடும்பத்திற்கு ஒரே ப்ளான்... ரூ.399 முதல்... - மிஸ் பண்ணிடாதீங்க!

  ரூ.399 பிளானுக்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக ரூ.500-ம், ரூ.696 பிளானுக்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக ரூ.875-ம் செலுத்த வேண்டும். ஜியோ ஃபைபர் யூஸர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் மற்றும் நல்ல கிரெடிட் ஸ்கோர்கள் உள்ளவர்களுக்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை தள்ளுபடி செய்யப்படும் என தெரிகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  ஜியோவின் அதிரடி ஆஃபர் : குடும்பத்திற்கு ஒரே ப்ளான்... ரூ.399 முதல்... - மிஸ் பண்ணிடாதீங்க!

  ட்ரூ 5-ஜியை 331 நகரங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஜியோ தனது நெட்வொர்க் அனுபவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அறிமுகப்படுத்துவதன் பின்னணியில் உள்ள யோசனையானது, போஸ்ட்-பெய்ட் யூஸர்களுக்கு அற்புதமான புதிய நன்மைகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் முயற்சியாக ஜியோ பிளஸ் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தி இருப்பதாக நிறுவன அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES