32 இன்ச் HD டிஸ்ப்ளே.. குரல் பதிவை ஏற்கும் வாய்ஸ் ரிமோட் கொண்ட பல அம்சங்களைக் கொண்டுள்ள ரெட்மி ஸ்மோர்ட் பயர் டிவி 32 வருகின்ற மார்ச் 21-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இன்றைக்கு அனைத்து வீடுகளில் அத்தியாவசிய பயன்பாடுகளில் ஒன்றாகிவிட்டது டிவி. குறிப்பாக இன்றைக்கு ஸ்மார்ட் டிவி-க்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பழைய மாடல் டிவி-க்களைப் பார்ப்பது என்பதே மிகவும் அரிதாகிவிட்டது.
இவ்வாறு டிரெண்டிங்கிற்கு ஏற்றவாறு ஸ்மார்ட் டிவி-க்களை மக்கள் வாங்கத் தொடங்கியதன் விளைவாகத் தான், தயாரிப்பாளர்களும் புதிய புதிய மாடல்களில் டிவிகளை விற்பனை செய்ய தொடங்கி விட்டனர். இதன்படி தற்போது ரெட்மி நிறுவனம் தற்போது ஸ்மார்ட் ஃபயர் 32( Redmi smart fire TV 32) என்ற புதிய மாடலை வருகின்ற மார்ச் 21-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இதன் அம்சங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
ஸ்மார்ட் ஃபயர் 32 இன்ச் டிவி ( Redmi smart fire TV 32) : ரெட்மி தனது முதல் அலெக்சா-இயங்கும் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி Fire OS-ல் இயங்குகிறது மற்றும் HD டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி டால்பி ஆடியோ சப்போர்ட் & 20W ஸ்பீக்கருடன் விற்பனைக்கு வருகிறது.
முக்கிய அம்சங்கள் : 32 இன்ச்சுடன் மெட்டல் வடிவமைப்பை கொண்டுள்ளதோடு 1366x768 பிக்சல் தெளிவுத்திறனுடன் இந்த டிவி வரவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியானது 1ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட 1.5GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A53 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட் டிவி 8ஜிபி உள் சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. Redmi Smart TV 32 Fire OS 7-ல் இயங்குவதால், இந்த டிவி ஆப் ஸ்டோர் மூலம், யூஸர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை Fire-ல் இருந்து அணுக உதவுகிறது
ஸ்மார்ட் டிவியானது வாடிக்கையாளர்களின் முகப்புத் திரையில் உள்ள DTH செட்-டாப்-பாக்ஸிலிருந்து லைவ் டிவியை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் DTH TV சேனல்கள் மற்றும் OTT பயன்பாடுகளுக்கு இடையில் தடையின்றி மாற அனுமதிக்கிறது. புதிய தொலைக்காட்சியானது ஆப்பிள் ஏர்ப்ளே மற்றும் மிராகாஸ்ட் ஆகியவற்றை முறையே ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருந்து நேரடியாக டிவி-யில் Cast செய்ய அனுமதிக்கிறது.
அலெக்ஸாவுடன் கூடிய ரிமோட் : Redmi Smart Fire TV 32 ஆனது ஒரு புதிய ரிமோட் உடன் வருகிறது. குறிப்பாக அலெக்ஸாவுடன் கூடிய Redmi வாய்ஸ் ரிமோட்டானது ஒரு நேர்த்தியான, மிகச்சிறிய ரிமோட், இது பரந்த அளவிலான செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளில் எளிதாகப் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது. ப்ளேபேக் கன்ட்ரோல்ஸ், சேனல் அப்/டவுன், மியூட் மற்றும் பிரபலமான பயன்பாடுகளுக்கு ஷார்ட்கட் போன்ற பட்டன்கள் இதில் உள்ளன.இதோடு பிரத்யேக அலெக்சா பட்டனை அழுத்திப் பிடித்து வாய்ஸ் கமெண்ட் வழங்குவதன் மூலம் ஒருவர் சேனல்களை எளிதாக மாற்றவும் மற்றும் எது தேவையோ? அதை எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
விலை விபரங்கள் : ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 32 விலை ரூ. 13,999. இது amazon.in மற்றும் mi.com இல் ஆன்லைனில் மார்ச் 21 முதல் விற்பனைக்கு கிடைக்கும். ஆன்லைனில் ரூ.12,999 ஆகும். அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் ரூ.1000 தள்ளுபடி விற்பனை வழங்குவதால் குறிப்பிட்ட காலத்திற்கு இதன் விலை ரூ.11, 999 ஆகும்.